மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு புதிய சாதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

1 Min Read

சென்னை, ஏப்.25 கடந்த 2024-2–025-ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

மின்னணு பொருட்கள்

கடந்த 2023-2024ஆம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கருநாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களைவிட 2 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதாவது, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 14.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற புதிய வரலாற்று உச்சத்தை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

சாதனை

53 சதவீதம் வளர்ச்சி: நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவாக 41.23 சதவீதத்தை தமிழ்நாடு அடைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து மின்னணு உற்பத்தியாளர்களுக்கும் வாழ்த்துகள். முந்தைய ஆண்டின் 9.56 பில்லியன் அமெரிக்க டாலரைவிட இந்த ஆண்டு 53 சதவீதம் வளர்ச்சி என்பது பெருமைக்குரிய தருணம்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை யின் கீழ் இது சாத்தியம் ஆகியுள்ளது. இது தொடக்கம்தான். விரைவில் 100 பில்லியன் டாலரை மின்னணு பொருட்கள் ஏற்றுமதி எட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக, கருநாடகா (7.85 பில்லியன்), உத்தர பிரதேசம் (5.26 பில்லியன்), மகாராஷ் டிரா (3.51 பில்லியன்), குஜராத் (1.85 பில்லியன்) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *