உலக மலேரியா நாள் இன்று மலேரியாவை ஒழிக்க இலக்கு நிர்ணயம் அதிகாரிகள் தகவல்

2 Min Read

சென்னை, ஏப். 25- ‘மலேரியா நோயால், கடந்த ஆண்டு 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்குள் தொற்றை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக மலேரியா நாள் இன்று  (25.4.2025) கடைப்பிடிக்கப்படும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மலேரியா நோய், ‘பிளாஸ்மோடியம்’ ஒட்டுண்ணியால் பாதிக்கப்படும், ‘அனோ பிலிஸ்’ வகை கொசுக்களால் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் மனிதர்களை கடிக்கும் போது, பாதிப்பை ஏற் படுத்துகிறது. காய்ச்சல், சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இந்நோயின் தீவிரம், கல்லீரல் மற்றும் ரத்த சிவப்பணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்நோய்க்கு ஆரம்ப நிலை யிலேயே சிகிச்சை பெற வேண்டும்.

குறிப்பாக, மலேரியா சிகிச்சை பெற்றவர்கள், மாதந்தோறும் குருதி பரிசோதனை செய்வதுடன், ஓராண்டு வரை எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

மலேரியாவால், 2022இல், 354 ; 2023இல் 384 பேர்; கடந்த ஆண்டில், 347 பேர் பாதிக்கப் பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை, 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. ஆனால், இந்த ஆண்டுக்குள் மலேரியா நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்து வருகிறோம்.

கடந்த ஆண்டை விட, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை கட்டுப்படுத் துவதுடன், அடுத்த ஓரிரு ஆண்டுகளில், மலேரியா இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும்.

ஏற்ெகனவே, தமிழ்நாட்டில் பெரியம்மை, போலியோ, இளம்பிள்ளைவாதம், ரண ஜன்னி, நரம்பு சிலந்தி நோய், பரங்கிப்புண் போன்ற நோய்கள் ஒழிக்கப்பட் டுள்ளன. அந்த வரிசையில் மலேரியாவும் முற்றிலும் ஒழிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

பள்ளி மாணவர்கள்

ஆதார் பயோமெட்ரிக்கை புதுப்பிக்க வேண்டும்

பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

சென்னை, ஏப். 25- பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் பதிவுகளை, புதுப்பிக்க தவறியவர்கள், கோடை விடுமுறையில் புதுப்பிக்க வேண்டும்’ என, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பள்ளிகளில் படிக்கும், 7 வயதுள்ள மாணவர்களுக்கு, முதலாவது கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டும். தவறியவர்கள், 8 – 14 வயதுக்குள் புதுப்பிக்க வேண்டும். மீண்டும், 15-17 வயதில், கட்டாய இரண்டாவது பயோமெட்ரிக் புதுப்பித்தல் பணிகளை, அந்தந்த பள்ளியிலேயே செய்திருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாத மாணவர்களை, தங்களின் அருகில் உள்ள, இ-சேவை மய்யங்களுக்கு அழைத்து சென்று, கோடை விடுமுறையில் புதுப்பிக்கும் பணிகளை, பெற்றோர் செய்ய வேண்டும்.

பள்ளி திறப்பின் போது, அனைத்து மாணவர்களுக்கும், உரிய ஆதார் எண் பெறும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *