கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த ஏப்.21-இல் காலமானார். வருகிற 26-ஆம் தேதி இறுதி நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்ற 135 கார்டினல்களில் ஃபெர்ரா, க்ளீமிஸ், கூவாகட் மற்றும் பூலா ஆகிய 4 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். கார்டினல்கள், திருச்சபையின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஆவர்.