புதுடில்லி, ஏப்.24- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த பா.ஜனதா எம்.பி. நிஷி காந்த் துபேவுக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.
குடியரசுத் துணைத் தலைவர்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட 10 மசோ தாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், உச்சநீதி மன்றமே தனது சிறப்பு அதிகாரத்தை பயன் படுத்தி ஒப்புதல் அளித்தது.
அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன் றத்தையும் அதன் தலைமை நீதி பதியையும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையாக விமர் சித்தனர். நீதிமன்றங்களே மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளித்தால், நாடாளுமன்றத்தை மூடிவிட வேண் டும் என்று நிஷிகாந்த் துபே கூறினார்.
தீவிரமான பிரச்சினை
இதற்கிடையே, பா.ஜனதா எம்.பி. நிஷி காந்த் துபேமீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குரைஞர் வழக்கு தொடர்ந்தார்.
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அந்த வழக்குரைஞர் ஆஜராகி, வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத் தினார்.
அவர் கூறியதாவது:- நாட்டில் உள்நாட்டு போருக்கு தலைமை நீதிபதியே பொறுப்பு என்று நிஷி காந்த் துபே கூறியுள்ளார். அவரது காட்சிப் பதிவு ‘வைரல்’ ஆனதும், சமூக வலைத்தளங்களில் உச்சநீதிமன்றத்தை ஏராள மானோர் அவதூறான வார்த் தைகளில் விமர்சித்து வருகிறார்கள். இது, தீவிர மான பிரச்சினை. இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த வாரம் விசாரணை
அதற்கு நீதிபதிகள், “நீங்கள் நீதிமன்ற அவ மதிப்பு மனு தாக்கல் செய்ய விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர்.
அதற்கு வழக்குரை ஞர், “எனது சக வழக் குரைஞர் ஒருவர், அட்டார்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணிக்கு கடிதம் எழுதி, நிஷிகாந்த் துபே மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டார். ஆனால் இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம், சமூக வலைத்தளங்களில் உள்ள காட்சிப் பதிவுக் களை நீக்குமாறு உத்தர விடுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து, நிஷி காந்த் துபே வுக்கு எதிரான மனு, அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.