அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சந்தையில் புழக்கத்துக்கு வந்துள்ள இந்த நோட்டில் ஒரு சிறிய எழுத்துப் பிழை மட்டுமே அது கள்ள நோட்டு என கண்டறிய உதவுகிறது. அசல் நோட்டில் ‘RESERVE BANK OF INDIA’ என இருக்கும். கள்ள நோட்டில் உள்ள ‘RESERVE’ல் E என்ற எழுத்துக்கு பதில் A என இருக்கிறது.
எனவே ஆங்கில, எழுத்துகளையும், சொற்களையும் சரியாகப் பாரு்கள் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால் என்.சி.இ.ஆர்.டி. பாடங்களில் ஆங்கிலச் சொற்களையெல்லாம் இந்தி, சமஸ்கிருதத்தில் எழுதச் செய்வதும் அதே, ஒன்றிய அரசுதான். என்னே விசித்திர முரண்பாடு!