சென்னை, ஏப்.22- தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. எனவே தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுப்பது தொழிலாளர் நலத்துறைதான். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகை தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு, படிப்படி யாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று குறிப்பிட்டார்.