புதுடில்லி,ஏப்.22- பல காரணங்களுக்காக குழந்தைகளை கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 13 பேருக்கு பிணை வழங்கி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மஹாதேவன் அடங்கிய அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு:
அதிகரிப்பு
பாலியல் தொழில், பிற வேலைகள், பிச்சை எடுக்க, குற்றச் செயல்களில் ஈடுபடுத்த, தத்து கொடுக்க என, பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படு வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
தத்தெடுக்கும் நடைமுறைக்கான காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதால், குழந்தைகளை கடத்துகின்றனர்.
சிறுவர்களின் குற்றச் செயல்களுக்கான தண்டனை குறைவாக இருப்பதால், அதில் அவர்களை ஈடுபடுத்து கின்றனர்.
இவ்வாறு பல காரணங் களுக்காக குழந்தைகளைக் கடத்தும் கும்பல், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். இதனால், பெற்றோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த மருத்துவமனைகளே பொறுப்பாகும். மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டால், அதன் உரிமம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த குறிப்பிட்ட வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட 13 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.
பிணை ரத்து
அவர்களுக்கு பிணை வழங்கிய உத்தரவை, சரியாக சிந்திக்காமல் வழங்கப்பட்டதாகவே பார்க்கிறோம். அந்த பிணை ரத்து செய்யப்படுகிறது.
அவர்கள் மீதான வழக்குகளை, ஆறு மாதங்களுக்குள் உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். தலைமறைவாக உள்ளவர்களை, இரண்டு மாதங்களுக்குள் மாநில காவல் துறை கைது செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் உத்தரப் பிரதேச அரசு மெத்தனமாக செயல் பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யவில்லை.
குழந்தைகள் கடத் தல் தொடர்பான வழக் குகளை, அந்தந்த உயர் நீதி மன்றங்கள், மிக விரைவாக விசாரிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த மருத்துவமனைகளே பொறுப்பாகும்.
மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டால், அதன் உரிமம் நிறுத்தி வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.