தமிழ்நாடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை: அரசு ஆணை வெளியீடு

3 Min Read

சென்னை, ஜூலை 3 – அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னு ரிமை வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை யாக வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் யார் யாருக்கு முதல் தலைமுறை பட்டதாரிக் கான சான்றிதழ் வழங்கலாம், இந்த சான்றிதழை எப்படி பெறுவது என்பது உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்றால் பெற் றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், முதல் தலை முறை பட்டதாரிகள், தமிழ் நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பகங்கள் மூலம் நிரப்பப்படும் அரசுப் பணியி டங்களில் முன்னுரிமை அளிக் கப்படும் என்று சட்டப்பேரவை யில் மனிதவள மேலாண்மைத் துறையின் 2021-2022ஆ-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக் கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வேலைவாய்ப்ப கங்கள் வழியாக நிரப்பப்படும் அரசுப் பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர் பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தற் போது வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம்: ஒரு குடும் பத்தில் 2 பேர் இருந்தால், முத லில் யார் பட்டப் படிப்பை முடிக்கிறார்களோ அவர்க ளுக்கு முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் வழங்கலாம். வீட்டில் முதல் பட்டதாரி 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தொழிற்கல்வி, மருத் துவப் படிப்பிலும், அடுத்த பட் டதாரி 3 ஆண்டு பட்டப்படிப் பிலும் சேரும் பட்சத்தில், யார் முதலில் பட்டப் படிப்பை முடிக்கிறாரோ அவருக்கு சான் றிதழ் வழங்கப்பட வேண்டும். இருவரும் ஒரே ஆண்டில் முடித்திருந்தால், தேர்ச்சி அடைந்த மாதத்தை கணக்கில் கொண்டு, முதலில் முடித்த வருக்கு வழங்கலாம். முதலில் பட்டப் படிப்பில்சேர்ந்து பட்டதாரி ஆவதற்கு முன்போ, அல்லது பட்டதாரிஆகி முதல் தலைமுறை பட்டதாரி சான் றிதழ் பெற்று வேலையில் சேர் வதற்கு முன்னரோ கெட்ட வாய்ப்பாகவோ உயிரிழந்து விட்டால், குடும்பத்தில் 2-ஆவ தாக பட்டதாரியான நபருக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்க பரிசீலனை செய்யலாம். 

அண்ணன், தம்பிகள் மனைவி மற்றும் மகன், மகள் களுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தால், அந்த குடும்பத்தில் முதலில் பட்டப் படிப்பு முடித்தவருக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட வேண் டும். 

முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபர், 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின்னர், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக் கப்பட்ட பல்கலைக்கழகங்க ளில் வழங்கும் பட்டங்கள், பட் டயங்கள் பெற்றிருக்க வேண் டும். முதல் தலைமுறை பட்ட தாரி சான்றிதழ் பெறவயது வரம்பு இல்லை. ஆண்டுவரை யறையும் கிடையாது. எந்த ஆண்டு பட்டப் படிப்பு முடித் திருந்தாலும், முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் பட் சத்தில் இச்சான்றிதழ் பெறலாம். 

அதேபோல, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தொலைதூரக் கல்வி, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டயம், பட்டம் பெற் றவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங் கலாம். இரட்டை குழந்தை களாக இருந்தால், குடும்பத்தில் பட்டதாரி இல்லாத நிலையில், முதல் பட்டதாரி சலுகையை இரட்டையர்கள் இருவருக்கும் வழங்கலாம். அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் சுய நிதி தொழிற்கல்லூரிகளில் படிக் கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த, பட்டதாரிகளே இல்லாத குடும்பத்தை சேர்ந்தமுதல் பட்டதாரி மாணவ, மாணவி கள் இதற்கு தகுதியுடையவர்கள். 

முதல் தலைமுறை பட்ட தாரி சான்று பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் பொது இ-சேவை மய்யத்தில் இணைய வழியே விண்ணப்பிக்க வேண் டும். குறுஞ்செய்தி வந்தவுடன் இணையவழியில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். தவறான தகவல் கொடுத்து சான்றிதழ் பெறப்பட்டதாக பின்னர் தெரியவந்தால், வழங் கப்பட்ட சான்றிதழ் வட்டாட் சியரால் ரத்துசெய்யப்படும். 

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்கு வது தொடர்பான புதிய இணைய தொகுப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு அர சாணையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் குமார் ஜயந்த் தெரிவித்து உள்ளார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *