மராட்டியத்தில் புதிய திருப்பம் ஹிந்தியை கட்டாயமாக்க அனுமதிக்க மாட்டோம்! உத்தவ் தாக்கரே உறுதி

1 Min Read

மும்பை, ஏப். 21- மராட்டிய பள்ளிக ளில் ஹிந்தியை கட்டாய மாக்கும் அரசின் முடிவை அனுமதிக்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே கூறினார்.

ஹிந்தி கட்டாயம்

மராட்டியத்தில்  1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 3ஆவது மொழியாக ஹிந்தி பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ், நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதற்கு மேனாள் முதல மைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக 19.4.2025 அன்று மும்பை யில் நடந்த அந்த கட்சி யின் தொழிலாளர் பிரிவு கூட்டத்தில் உத்தவ் தாக் கரே பேசியதாவது:-

எங்கள் கட்சிக்கு ஹிந்தி மீது எந்த வெறுப்பும் இல்லை. ஆனால் அது மராட்டியத்தில் கட் டாயம் ஆக்கப்படுவது ஏன்?. பாசத்துடன் நீங்கள் எங்களிடம் எதை கேட்டாலும் நாங்கள் அதை செய் வோம். ஆனால் நீங் கள் எதையாவது கட் டா யப்படுத்தினால், அதை நாங்கள் எதிர் ப்போம். ஹிந்தியை படிக்க ஏன் இப்படி கட்டாயப்படுத்துகிறீர்கள்?. மராட்டியத்தில் ஹிந்தியை கட்டாயமாக்க அனுமதிக்க மாட்டோம்.

அழிக்க நினைப்பவர்களுக்கு

மராட்டியத்தில் நீங்கள் வசிக்கவேண்டுமென்றால், நீங்கள் ஜெய் மகா ராட்டிரா என முழக்க மிட வேண்டும். மராத் தியையும், மராட்டியர் களையும் அழிக்க நினைப் பவர்களுக்காக மாநில அரசு வேலை செய்கிறதா?.

வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிக்க வேண்டும் எனக்கூறியதால் வக்பு திருத்த சட்டத்தை எதிர் த்தோம். நீங்கள் இந்து அமைப்புகளில் இந்து அல்லாதவர்களை நியமிக்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? வக்பு சட்டம் தொடர்பாக இதே கேள்வியை ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *