புதுச்சேரி, ஏப். 21- திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் என்ற நூல்கள் அறிமுக விழா 19-04-2025 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர்.வி. முத்து தலைமையில் மாவட்டத் கழகத் தலைவர் வே.அன்பரசன் வரவேற்புரை ஆற்றினார். புதுவை மாநிலக் கழகத் தலைவர் சிவ.வீரமணி நூலாசிரியர் பற்றிய தகவல்களை எடுத்துக் கூறி தொடக்க உரையாற்றினார்.
புதுவை மாநிலத் தி.மு.க அமைப்பா ளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மனித உரிமைக் காவலர் தந்தை பெரியார் எனும் தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இரா.விசுவநாதன்
விழாவில் மேனாள் அமைச்சர் தோழர் .இரா.விசுவநாதன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் நூலை கலைமாமணி செந்தமிழ்ச் செம்மல் சீனு. வேணுகோபால் ஆங்கில நூலை கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி ஆகியோர் நூல்களின் சிறப்புகளைப் பற்றிய ஆய்வுரை நிகழ்த்தினர்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தன்னுடைய ஏற்புரையில் தமது குடும்பம் முழுக்க முழுக்க வைதீகத்தை சேர்ந்தது என்றும் இளமை காலத்தில் தனது தந்தையார் சாமியாடியாக இருந்தார் எனவும் பிறகு தான் மாறியது பற்றிய தன்னுடைய நினைவுகளை எடுத்துக் கூறினார். மேலும், கல்லூரியில் படிக்கும் பொழுது கடலூர் அரசு நூலகத்தில் விடுதலை நாளிதழ் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அதன்மூலம் கவரப்பட்டு, தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதன் வழியில் இயக்கத்தில் பயணம் செய்கிறேன்.
பெரியார் பற்றிய நூல்
எனவே, அத்தகைய தலைவரைப் பற்றி நான் மனித நேயத்தோடும், மானுடப் பற்றுடனும் கொள்கை வழியில் பயணிக்க காரணமான பெரியார் பற்றிய நூல் எழுதி அவருக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் நிகழ்ச்சி தான் இந்நூல் வெளியீடு என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் காட்டும் வழியில் அயராது பயணம் செய்வேன் என்றும், இத்தகு நிகழ்ச்சிக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்து உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப் பாளர் ஆடிட்டர் கு. இரஞ்சித்குமார், கழக மாவட்டக் காப்பாளர்கள் இரா. சடகோபன், இர. இராசு, மாவட்டச் செயலாளர் தி. இராசா, பொதுக்குழு உறுப்பினர்கள் கி. அறிவழகன், லோ. பழனி, விலாசினி இராசு, துணைத் தலைவர் மு. குப்புசாமி, ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
கழகத் தொழிலாளரணித் தலைவர் வீர. இளங்கோவன், செயலாளர் கே. குமார், புதுச்சேரி நகராட்சி கழகத் தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் களஞ்சியம் வெங்கடேசன். நகராட்சி வடக்குத் தலைவர் எஸ். கிருஷ்ணசாமி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் சிவராசன், அரியாங்குப்பம் கொம்யூன் கழகச் செயலாளர் ஆதி.நாராயணன், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன், முகமது நிஜாம், இரா.ந.முத்துவேல், பகுத்தறிவாளர் கழகத் துணை அமைப்பாளர் மு.ந.ந. நல்லையன், கழக இளைஞரணித் தலைவர் ச.சித்தார்த், செயலாளர் ச. பிரபஞ்சன், திராவிட மாணவர் கழக தலைவர் பி. அறிவுச்செல்வன், செயலாளர் சபீர் முகமது ஆகிய புதுச்சேரி கழகத் தோழர் களும், கடலூர் மாற்றும் விழுப்புரம் மாவட்டத் தோழர்களும் புதுவையில் உள்ள பெரியாரிய, அம்பேத்காரிய, மார்க்சிய உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், பேராசிரியப் பெருமக்கள், எழுத்தாளர்கள், தனித் தமிழ் பற்றாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திராவிட முன்னேற்ற கழக அயலக வாழ் [அமெரிக்கா] பொறுப்பாளர் பிரபு சிவக்குரு, பிரகாஷ் சிவக்குரு, டாக்டர் பாரதி [புதுச்சேரி] ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். நிறைவாக விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.