வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து – முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்! ஃபரூக் அப்துல்லா கருத்து

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜம்மு, ஏப்.21  வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும். இதுபோன்ற மத வெறுப்புணர்வு அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கூறினார்.  ஜம்முவில் நேற்று (20.4.2025) அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஹிந்து – முஸ்லிம் பிளவு

மக்கள் கூடி போராட்டம் நடத்துவது என்பது ஒரு பிரச்சினையில் தங்கள் எதிா்ப்பையும், ஒற்றுமையையும் காட்டுவதாக இருக்க வேண்டும். இந்த அச்சுறுத்தல் நமக்கு பாகிஸ்தானில் இருந்தோ, சீனாவில் இருந்தோ வரவில்லை. மதத்தின் பெயரில் வெறுப்புணா்வைப் பரப்புபவா்கள் பிரச்சினையைத் தூண்டி விட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை நாடு முழுவதும் ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கக் கூடிய  வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற மத வெறுப்புணா்வு நிகழ்வுகள் அதிகரிப்பது தேசத்தை பலவீனமாக்கும்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணா்வை வளர்ப்பது, வீடுகளை இடிப்பது, மசூதிகள், மதப் பள்ளிகளுக்கு எதிரான நட வடிக்கைகள் அந்த மதத்தினரை ஒதுக்கி ஓரந்தள்ளுவதாக அமையும். இதற்கு எதிராக உச்சநீதிமன்றம் தடைகளை விதித்துள்ளது. இந்த நாட்டில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனி சட்ட மில்லை.

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் நீதித்துறை மட்டுமே இப்போது ஜனநாயகத்தைக் காத்து வருகிறது. தவறான சட்டங்கள் இயற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிகிறது. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாது. உச்சநீதிமன்றம் வக்ஃபு திருத்தச் சட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது. இறுதித் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

பல்வேறு ஜாதி, மத, இனத்தைச் சோ்ந்தவா்கள் ஒற்றுமையாக வாழ்வதுதான் இந்தியாவின் சிறப்பம்சம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இந்த தேசத்தைக் கட்டிக்காக்க முடியும். வெறுப்புணர்வைப் பரப்புபவர்களுக்கு எதிராகவும் நாம் ஒற்றுமையாக இருந்து வென்று காட்ட வேண்டும்.

– இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *