புதுடில்லி, ஏப்.21- நாடு முழுவதும் நடந்த 2ஆம் கட்ட ஜே.இ.இ மெயின் நுழைவுத்தேர் வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 110 மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்களது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
9.92 லட்சம் பேர் எழுதினர்
அய்.அய்.டி. உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ.நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்த ஆண்டுக்காக நடத்தப்பட்ட 2ஆம் கட்ட மெயின் நுழைவுத்தேர்வு முடிவுகள் 19.4.2025 அன்று வெளியிடப்பட்டன. 9.92 லட்சத்துக்கு அதிகமான மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
2 பெண்கள் முதலிடம்
இதில் 2 பெண்கள் உள்பட 24 மாணவர்கள் 100 மதிப் பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். அந்த வகையில் ராஜஸ்தானை சேர்ந்த 7 பேர், தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மராட்டியத்தில் இருந்து தலா 3 பேர், டில்லி, மேற்கு வங்காளம், குஜராத்தில் இருந்து தலா 2 பேர், கருநாடகா, ஆந்திராவில் இருந்து தலா ஒருவர் முதலிடம் பிடித்துள்ளனர்.
முதலிடம் பிடித்தவர்களில் 21 பேர் பொதுப்பிரிவினர் எனவும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் இருந்து தலா ஒருவர் உள்ளனர் எனவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
தேர்வு மோசடி
இந்த தேர்வில் 110 மாணவர் கள் முறைகேட்டில் ஈடுபட் டது அம்பலமாகி உள்ளது. எனவே அந்த மாணவர்க ளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இதைப்போல ஒளிப்படங்கள், பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் பிற தனி விவரங்களில் காணப்படும் முரண்பாடு காரணமாக 23 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக இந்த நுழைவுத் தேர்வு 300 நகரங்களில் அமைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மய்யங்களில் நடத்தப்பட்டன.