உள்ளாட்சி மன்றங்களில் நியமன இடங்கள் – தமிழர் தலைவருக்கு டிசம்பர் 3 இயக்கம் புகழாரம்
சென்னை, ஏப்.20 தமிழ்நாடு அரசியலில் சமூகநீதியை உறுதியாக் குகின்ற தொடர் பணிகளை மேற் கொள்பவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் – எமது இயக்கப் பணிகளை அங்கீகரித்தது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமிதத்தையும் எமக்கு அளிக்கிறது என டிசம்பர் 3 இயக்கத்தின் பேராசிரியர் தீபக் நாதன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் எழுதியிருப்பதாவது:
‘‘இந்தியாவில் மாற்றுத்திறனாளி களுக்கான பல மாநாடுகள் நடந்துள்ளது ஆனால் அவையனைத்தும் ஒரு சமூக மாநாடாக (social conferences) நடந்துள்ளனவேயன்றி, மாற்றுத் திறனாளிகளை ஓர் அரசியல் சக்தியாக ,அரசியல் உரிமை பெற்ற அல்லது பெறத் தகுதி வாய்ந்த மக்களாக பார்க்கின்ற பார்வை இந்திய சமூகத்திடம் தற்போதுவரை இல்லை!
ஆனால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “மாற்றுத்திறனாளிகளின் குரலும் பிரதிநிதித்துவமும் சமூக நீதியே” என்ற தலைப்பில் 2018 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் மாநாட்டை தலைமை தாங்கி நடத்தி வைத்து, சென்னை பிரகடனத்தையும் முன்மொழிந்து நிறைவேற்றித் தந்தார்கள். அந்த சென்னை பிரகடனத்தினுடைய வழியாகத்தான் டிசம்பர் 3 இயக்கம் தன்னுடைய வழக்காடுதலை(advocacy) தொடர்ச்சியாக செய்து வந்தது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிக்கையில் எமது இயக் கத்தைப் பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளது இதற்கு மிகப்பெரிய சான்றான்மையாக அமைகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு டிசம்பர் 3 இயக்கத்தின் உளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த வேளையிலே தெரிவித்து மகிழ்கிறோம்.
மண்டல் இடஒதுக்கீட்டுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி சுயமரி யாதை திருமணத்திற்கான போராட்டமாக இருந்தாலும் சரி தமிழர்கள் அரசியல் வரலாற்றில் சமூக நீதிப் பயணத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் போன்று பல்வேறு முதலமைச்சர் களோடு தமிழக அரசியலில் சமூக நீதியை உறுதியாக்குகின்ற தொடர் பணிகளை மேற்கொண்டவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். அப்பேர்ப்பட்ட ஒரு பெரும் ஆளுமை, எமது இயக்கப் பணிகளை அங்கீகரித்து அறிக்கை அளித்தது, உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சி யாகவும், ஏதோ ஒரு சாதனையில் நாம் பயணப்பட்டோம் என்ற பெருமிதத் தையும் எமக்கு அளிக்கிறது’’ என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.