கோபிச்செட்டிப்பாளையம், ஏப். 20- திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் மனிதம் சட்ட உதவி மய்யத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் த.எழில் அரசு வரவேற்புரையாற்றினார். மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் த.சிவபாரதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பெரியார் பெருந்தொண்டர் ராஜமாணிக்கம், கோபி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் , மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார். மாநில சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் நாகை மு. இளமாறன் ஆக்க உரையாற்றினார்.
மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா. சூர்யா நன்றி உரையாற்றினார். மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் அ.அஜித்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அஜித் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரா.கார்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் அ. தனபால், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ச.பிரசாந்த், மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர் பெ.விக்னேஷ், நம்பியூர் ஒன்றிய மாணவர் கழக தலைவர் மயில்சாமி, பவானிசாகர் ஒன்றிய மாணவர் கழக தலைவர் கோகுல்ராஜ், மகளிர் அணி பாசறை தலைவர் ப. திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பள்ளிக் கல்லூரிகளில் திராவிட மாணவர் கழக புதிய கிளைகளை உருவாக்குவது, மாணவர் சந்திப்புக் கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவது, துண்டறிக்கை பிரச்சாரம் செய்வது, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது, திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டத்தை நடத்துவது, பள்ளிக் கல்லூரிகளில் ஏற்படும் ஜாதிய மற்றும் சமூகநீதி தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக தலைமை கழகத்துக்கு தெரியப்படுத்துவது, கல்லூரி விடுதிகளில் விடுதலையை கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிட மாணவர் கழகப்புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட தலைவர் : மா.சூர்யா
மாவட்ட செயலாளர் : த. எழில் அரசு
மாவட்ட து.செயலாளர் : பெ.விக்னேஷ்
பவானி ஒன்றிய தலைவர் : ஆ.கோகுல்ராஜ்