காசியாபாத், ஏப்.19 உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப் பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர்.
காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப் பட்டிருந்த முகாலாப் பேரரசின் கடைசி மன்னர் பஹதூர் ஷா ஜாஃபரின் சுவரோவியத்தின் மீது நேற்று (18.4.2025) ஹிந்து ராக்ஷா தால் எனும் இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்பு நிற ஸ்பேர் பெயிண்ட் அடித்து சேதப் படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அடை யாளம் தெரியாத நபர்கள் மீது ரயில்வே காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாங்கள் சேதப்படுத்தியது முகலாய மன்னரான அவு ரங்கசீப்பின் சுவரோவியம் என அந்த வலது சாரி அமைப்பின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்நகரத்தின் சுவர்களை ஓவியம் வரைந்து அழ குப்படுத்தும் வேலைகளைச் செய்து வரும் திஷா ஃபவுண்டேஷன் எனும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த உதித்தா தியாகி என்பவர் அந்த ஓவியம் குறித்து விளக்கமளித்து காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், தானும் தங்களது நிறுவனமும் எந்தவொரு முகலாய மன்னரையும் தற்போது புகழ்ந்து வரையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.