மானாம்பதி, ஏப்.19- மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமம், ம.தனலட்சுமி -ஆ.காமராஜ் இணையரின் இளைய மகள் த. கா. கோமதி (எ) அம்மு, மானாம்பதி, ஆமையாம்பட்டு கிராமம் கோ.பழனித்தாய் – த. தம்பிதுரை இணையரின் இளைய மகன் ப. த. இராஜ்குமார் – சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் மு. நித்தியானந்தம் இல்ல சுயமரியாதை இணையேற்பு விழா 16.4.2025 அன்று மானாம்பதியில் சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.
இணையர்கள் உறுதிமொழி
கழக ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம் முன்னிலையில், மு. நித்தியானந்தம் வரவேற்புரை வழங்க, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சே. மெ. மதிவதனி, தனது தாயாருடன் வந்திருந்து சிறப்புரையாற்றி யதோடு, இணையர்களை உறுதிமொழி ஏற்க வைத்து இணையேற்பு விழா மிகச் சிறப்பாக நடத்தி வைத்தார்.
முரசொலி வாசகர் வட்ட அமைப் பாளர் தடா ஓ. சுந்தரம் வாழ்த்துரை வழங்கினார், அரும்பாக்கம் தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப,முத்தையன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன், மோகன்ராஜ், ஜெயராமன், செங்கை சுந்தரம், சோ.மா. பொறுப்பாளர் கலைச்செல்வன், சோ.மா. இ. செயலாளர் ஆர். சந்தோஷ், சோ.மா. இ. து. செயலாளர் எம். சந்தோஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட மகளிரணி த. அனுஷா தனபால், பெரியார் பிஞ்சுகள் அ. நி. யாழ்திலீபன், அ. நி. யாழிசை, மணமக்கள் நாகம்மையா குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கினார்.