டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மகாராட்டிராவில் அஜித் பவார் பேசத் தடை; இது மூன்றாவது முறை என ஆதங்கம்.
* கேரள பாஜகவில் ஆர்.எஸ்.எஸ்.-இன் ஆதிக்கம். பாஜக தலைவர் நியமனம் செய்தவர்களை நீக்க கோரிக்கை.
தி இந்து:
* 1ஆம் வகுப்பு முதல் கட்டாய பாடம் – ஹிந்தி திணிப்புக்கு எதிராக மகாராட்டிராவில் காங்கிரஸ் எதிர்ப்பு. பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை மதிக்க வேண்டும் என்று பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எந்த மாநிலங்களவைத் தலைவரும் இதுபோன்ற “அரசியல் அறிக்கைகளை” வெளியிடுவதைப் பார்த்ததில்லை என்றும், “நீதித்துறைக்கு ஒரு பாடம் கற்பிக்கப்படுவது போல் தெரிகிறது” என்றும் மசோதாக்கள் மீதான உச்ச நீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு தொடர்பாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், நீதித் துறையை விமர்சித்த சில நாட்களுக்குப் பிறகு, மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் பேட்டி.
* மாணவர்களுக்கு ஜாதி அடிப்படையிலான அநீதியை முடிவுக்குக் கொண்டுவர கருநாடகா வில் ரோஹித் வெமுலா சட்டத்தை இயற்றுமாறு ராகுல் காந்தி முதலமைச்சர் சித்தராமையாவுக்கு வலியுறுத்தல்.
* தமிழ்நாடு ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற நடவடிக்கை எல்லை மீறியதல்ல. அரச மைப்பின் விளக்கத்தைப் பொறுத்தவரை, இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் வார்த்தை கடைசியாக உள்ளது என உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
* உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் ‘ஜெய் சிறீ ராம்’ என்று முழக்கமிட மறுத்ததற்காக 13 வயது முஸ்லிம் சிறுவனை ஒரு சிறுவன் கண்ணாடித் துண்டால் குத்தியுள்ளான்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆந்திர அரசு 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மூன்று துணைப் பிரிவுகளாகப் பிரிக்க எஸ்.சி. துணை வகைப்பாடு ஆணை வெளியிட்டது. மொத்தம் 15 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 12 எஸ்.சி. பிரிவினரைக் கொண்ட குரூப் I-க்கு 1 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கும். குரூப் IIஇன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 18 எஸ்.சி. பிரிவினருக்கு 6.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும், மேலும் குரூப் III-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 29 எஸ்.சி. பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
தி டெலிகிராப்:
* ஆக்ரா திருமண ஊர்வலத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மணமகன் தாக்கப்பட்டார்; இசையுடன் மணமகன் ஊர்வலம் வருவதை எதிர்த்து ‘உயர் ஜாதியினர்’ தடிகளால் தாக்கியதாகக் காவல்துறையில் புகார்.
– குடந்தை கருணா