வட அமெரிக்காவில் தந்தை பெரியார்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 36 ஆவது ஆண்டு விழா சிறப்பாக வெற்றி நடைபோட்டு சாக்ரமெண்டோ, கலிபோர்னி யோவில் 30.6.2023 லிருந்து நடந்து கொண் டிருக்கிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அருமைக் கவிதை வரிகள் (இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே) உண்மையாகிக் கொண்டுவருகிறது. அமெரிக்கத் தமிழர்கள் இயல், இசை, நாடகம் கண்டு களித்து வரு கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வந்த தமிழ் அறிஞர்களும் கலைஞர்களும் எங் களைத் தமிழ் இலக்கி யத்திலும் கலைகளிலும் வல்லுநர்களாக மாற்றி கொண்டிருக்கிறார்கள். அய்யா இமையம் தமிழின் வல்லமை பற்றியும், காலத்திற்கு ஏற்ப தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும் வலிமையையும் உதாரணங் களோடு அருமையாக விளக்கி சொற்பொழி வாற்றினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் எப்படி கணினி உலகத்தில் தமிழ் எழுத் துலகத்திற்கு எவ்வளவு உதவி செய்து வரு கிறது என்று பெருமை பொங்க விளக்கிச் சொன்னார்.

மற்றும் தமிழ் ஆளுமைகள் கு.வே.பால சுப்பிரமணியன், வழக்குரைஞர் ராமலிங்கம், கவிஞர் உமாபாரதி, சொல்லின் செல்வர் சுகி. சிவம், ஊடகவியலாளர் செந்தில், கவிஞர் சுல்தானா மற்றும் தமிழ் பற்றாளர்கள் பொங்கி வழியும் அறையில் உணர்ச்சி பொங்கும் உலகத்திற்கு இட்டுச் சென்றார்கள். மேலும் திருக்குறள் புதுமை இசையில் ஊறி எங்களை மகிழ்வித்துக் கொண்டுள்ளது. பெரியார் பன் னாட்டு அமைப்பு அமைத்த கூட்டத்தில் கருத்தாழமிக்க மனித நேய கொள்கைகள் பரிமாறப்பட்டன. ஊடகவியலாளர் செந்தில் வேல் ஊடகத் துறையில் பெரியார் கொள்கை பரப்புதல் பற்றியும்,  அய்யா இமையம் பெரியார் உலகம் அனைத்திற்கும் உரியவர் என்றும் பேசினார்கள். கலிபோர்னியா வழக் குரைஞர் தேன்மொழி ஜாதிக்கொடுமையை அமெரிக்க மண்ணிலிருந்து ஒழிப்பதற்கு பாடு பட்டு வருகிறார்.அவர் அமெரிக்க மண்ணில் நிகழும் ஜாதிக் கொடுமைகள் பற்றியும் அவர் அனுபவித்த துன்பங்களையும் உருக்கமாக எடுத்துரைத்தார். முனைவர் கார்கா சட்டர்ஜி நாடாளுமன்ற மாற்றம் மக்கள் தொகைப்படி அமைந்தால் நாம் எவ்வளவு இழப்போம் என்று விளக்கினார். மற்றபடி பெரியார் அய்யாவின் மனித நேயக் கருத்துகளையும் பகுத்தறிவு வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ள தமிழரிடம் ஆர்வம் வளர்ந்து வருதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பெரியார் அய்யாவின்  வழிகாட்டுதலில் வாழும் திராவிட அமெரிக்கத் தமிழர்கள் செழு மையாக வளர்ந்து கொண்டுவருகிறார்கள் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள் கிறேன்.

சரோ இளங்கோவன்

சேக்ரமண்டோ, கலிபோர்னியா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *