நெல்லை, ஏப்.18 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வக்ஃபு புதிய சட்டப் படி எந்த உறுப்பினர் நியமனமும் கூடாது. ஏற்கெனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துகளின் நிலம் வகைப்படுத்துதலும் கூடாது. உறுப்பினர் நியமனம் அனைத்திலும் தற்போதைய நிலை தொடர வேண்டும். மத்திய அரசு, மாநில அரசுகள், வக்ஃபு வாரியம் 7 நாட்களில் பதிலளிக்கவும் தாக்கீது அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அனைத்து ஜமாத், அனைத்து அரசியல் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தையொட்டி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
1,500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆட்டோ, கார், வேன் ஆகியவையும் இயங்க வில்லை.