மும்பை. ஏப்.18- மராட்டிய மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக ஹிந்தி பாடம் கட்டாயம் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறை
மராட்டிய மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. மாணவர்களுக்கு ஆங்கி லம் மற்றும் மாநில மொழியான மராத்தி கட்டாயம் ஆகும். 3-ஆவது மொழியை மாணவர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
இதேபோல 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கிலவழி பள்ளி களில் மாணவர்கள் மராத்தி, ஆங்கிலத்தை கட்டாய மொழி பாடமாக படித்து வருகின்றனர். தமிழ், உருதுவழி பள்ளிகளில் மாணவர்கள் அந்த மொழியையும் படித்து வருகின்றனர்.
அதிரடி உத்தரவு
இந்த நிலையில் மாநில பள் ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன் படி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக ஹிந்தி படிப்பது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. மராத்தி மற்றும் ஆங்கிலம் வழி பள்ளிகளில் மட்டும் 3-வது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதர பள்ளிகளில் தற்போது உள்ள நிலை தொடரும். அதாவது தமிழ்வழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து ஆங்கிலம், மராத்தியுடன், தமிழை படிக்கலாம். அவர்களுக்கு ஹிந்தி கட்டாயம் கிடையாது.
வரும் கல்வி ஆண்டில் (2025-2026) இருந்து 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயம் 3-ஆவது மொழியாக ஹிந்தியை படிக்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது. தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
புதிய பாடத்திட்டம்
இதேபோல வரும் கல்வி ஆண்டில் (2025-2026) தேசிய கல்வி கொள்கையை அமல்படுத் தும் வகையில் 1-ஆம் வகுப் புக்கு புதிய பாடத்திட்டம் அமல் படுத்தப்பட உள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் (2026-2027) 2, 3, 4, 6-ஆம் வகுப்புக்கும், 2027-28-ம் கல்வி ஆண்டில் 5, 9 மற்றும் 11-ம் வகுப்பிற்கும், 2028-29-ம் கல்வி ஆண்டில் 8, 10, 12-ஆம் வகுப்புகளுக்கும் தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப் பட உள்ளது.
எதிர்ப்பு
இந்தநிலையில் 1முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம் என்ற மாநில அரசின் அறிவிப்பு காரணமாக தொடக்கப்பள்ளிகளில் பாடத்திட்டத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு ஹிந்தியை கட்டாயமாக்கும் அறிவிப்புக்கு கல்வியாளர்கள், காங்கிரஸ், நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.