கொல்கத்தா, ஏப்.18 மேற்குவங்கம் மொர்ஷி தாபாத்தில் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான அமைதிப்பேரணி நடந்த போது வன்முறை வெடித்தது, தொடர்ந்து கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் மொர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிலர் கலவரம் செய்து விட்டு ஓடிய இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ஹிந்துக்கள் என்றும், பீகாரில் இருந்து பணம் கொடுத்து அனுப்பப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளனர்.
இருவரையும் ஊர் மக்கள் காவல்துறை யினரிடம் பிடித்துக் கொடுத்த பிறகு மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வரலாம்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, ‘‘அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து வந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்கவேண்டும்’’ என்று கூறிய நிலையில் இரண்டு ஹிந்து பீகாரிகள் பிடிபட்டது மம்தாவின் கூற்று உண்மையாய் மாறிவிட்டது.