டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய மாநில உறவுகள் குறித்து அரசமைப்பு சட்டத்தின் படி இருதரப்பாரும் விவாதித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்; மாநிலங்களின் நிதி வருவாயை பெருக்க வேண்டும் என்றாலும் அதற்கும் வழிவிட வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழு இதை ஆராய்ந்து முடிவு எடுக்கும் என கருதுகிறோம் என்கிறது தலையங்கம்.
* மே 5 வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் வக்பு வாரியத்துக்கு புது உறுப்பினர் நியமிக்கக் கூடாது – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு – ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க ஒரு வாரம் கெடு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பீகார் தேர்தல் ஆயத்தப் பணிகளை இந்தியா கூட்டணி தொடங்குகிறது, ஒருங்கிணைப்புக் குழு தலைவராக தேஜஸ்வி நியமனம்.
*மகாராட்டிராவில் ஹிந்தி எதிர்ப்பு: மகாராட் டிரா தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தி கட்டாய மாக்கப்படுவதற்குக் காங்கிரஸ், ராஜ் தாக்கரேயின் எம்என்எஸ் எதிர்ப்பு.
* 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையத்தால் திருத்தங்கள் “மிகவும் தந்திரமாக” செய்யப்பட்டதாகவும், வாக்காளரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் என்று கூறி சிசிடிவி காட்சிகளை அணுகுவதைத் தடுத்ததாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் 3 வாரங்கள் அவகாசம்.
* வக்ஃபு கவுன்சில் மற்றும் வாரியங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாது என்றும், பயனரால் வக்ஃபு மூலம் அறிவிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் அடுத்த விசாரணை வரை அறிவிக்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்ததை அடுத்து,, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது “அரசமைப்புக்கு கிடைத்த வெற்றி” என வரவேற்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆங்கில வழி பாடப்புத்தகங்களுக்கு ஹிந்தி தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கான என்.சி.இ.ஆர்.டி. முடிவுக்குக் கேரள பொதுக் கல்வி அமைச்சர் வி. சிவன் குட்டி கண்டனம்.
தி டெலிகிராப்:
*“ராம்பூர் பாலியல் வன்கொடுமை ‘மிகவும் வெட்கக்கேடானது மற்றும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது; பாஜக தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான ஒரு சார்புடையது” என உ.பி. யோகி அரசை கண்டித்து, ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு.
* ரூ.190 கோடியில் இருந்து ரூ.3 லட்சமாக குறைப்பு: பழங்குடி மாணவர்களின் ஆராய்ச்சிக்கான உதவித்தொகை திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.3 லட்சமாக குறைத்தது மோடி அரசு. இது 2024-2025 இல் ஒதுக்கப்பட்ட ரூ.190 கோடியிலிருந்து ஒரு பெரிய சரிவு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “பீகாரின் உண்மையான இரட்டை இயந்திரம் குற்றமும் மற்றும் ஊழலும்தான்” என்று தேஜஸ்வி குற்றச் சாட்டு.
– குடந்தை கருணா