கொல்கத்தா, ஏப்.17- மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்ட போராட்டத் தில் நிகழ்ந்த வன்முறைக்கு பா.ஜனதாவும், எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவும் காரணம் என குற்றம் சாட்டியுள்ள மம்தா உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடிகட்டுப்படுத்த வேண் டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
வக்பு திருத்த
சட்ட வன்முறை
சட்ட வன்முறை
வக்பு திருத்த சட்டத் துக்கு எதிராக மேற்கு வங்காளத்தின் பல இடங் களில் போராட்டம் நடந்து வருகிறது. இதில் முர்சிதாபாத்தில் ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் மாநி லத்தின் முஸ்லிம் தலை வர்கள் மற்றும் இமாம்கள் மம்தாவை சந்தித் தனர். அவர்கள் மத்தியில் பேசும் போது மம்தா கூறியதா வது:-
எல்லை பாதுகாப்பு
படையின் பங்கு
படையின் பங்கு
முர்சதாபாத் கலவரத்துக்கு எல்லை தாண்டி வந்த சக்திகளே காரணம் என அறிந்தேன். எல்லையை காப்பது பி.எஸ்.எப்.பின் பணி இல்லையா? பன்னாட்டு எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசிடம் இல்லை. எனவே ஒன்றிய அரசு தனது பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது. இந்த வன்முறையில் உள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பி.எஸ்.எப்.பின் ஒரு பகுதியினர் மற்றும் குறிப்பிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்களின் பங்கு இருக்கிறது.
இதில் எல்லை பாது காப்புப் படையின் பங்கு என்ன? என்பதை கண்டு பிடிக்க உத்தரவிட்டு உள் ளேன். வன்முறையின் போது கற்களை வீசுமாறு எல் லைப்பகுதிகளில் உள்ள உள்ளூர் இளைஞர்களை தூண்டி விடுமாறு எல் லைப் பாதுகாப்புப் படை யாருக்கு நிதியளித்தது என்பதைக் கண்டுபிடிப் பேன்.
ஒருபோதும் பிரதமராகமாட்டார்
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்காணிக் குமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய அரசு நிறுவனங்களை எவ்வாறு அவர் தவறாக பயன்படுத்துகிறார் என பிரதமர் கண்காணிக்க வேண்டும். பிரதமர் அவரை கட் டுப்படுத்த வேண்டும்.
தனது சொந்த அரசியல் நலனுக்காக நாட்டுக்கு அவர் தீங்கு விளைவிக்கிறார். அவர் ஏன் அவசரப்படுகிறார்? அவர் ஒரு போதும் பிரதம ராகமாட்டார். மோடி சென்றபிறகு அவர் என்ன செய்வார்? முர்சிதாபாத் கலவரத்துக்கு மாநி லத்துக்கு வெளியே உள்ள பா.ஜனதா குண்டர்களும் காரணம் ஆகும். அவர் கள் இந்து- முஸ்லிம்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்கப் பார்க்கிறார்கள்.
ஏன் இந்த அவசரம்?
வக்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவ தில் ஏன் இந்த அவசரம் என இந்திய அரசிடம் சவால் விட்டு கேட்கிறேன். வங்காளதேசத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை நீங்கள் அறியவில்லையா? மேற்கு வங்காள மாநிலம், வங்காளதேசம், நேபாளம் மற்றும் பூடானுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
வங்காளதேச இடைக் கால அரசின் தலைவர் முகமது யூனுசுடன் சந்திப்புகளை நடத்துங்கள். ஒப்பந்தங்களில் கையெழுத் திடுங்கள். நாட்டிற்கு நன்மை பயக்கும் எதையும் நான் வரவேற்பேன். ஆனால் உங்கள் திட்டமோ எல்லை தாண்டிய சக்தி களை அனுமதிக்கும் சில நிறுவனங்கள் மூலம் கலவரங்க ளைத் தூண்டு வதுதான்.
வக்பு சட்டத்தை திருத்த விரும்பினால், அது அரசியல்சாசன திருத்தமாக இருக்க வேண்டும். மத சொத்துகளின் கட்டுப்பாட்டை வலுக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை.
இங்கே நான் இருக்கும் வரை மக்களிடையே பிரிவினையை ஏற் படுத்துவதை அனுமதிக்க மாட்டேன். ஒற்றுமை யையே விரும்புகிறேன்.
இவ்வாறு மம்தா கூறினார்.