டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* புதிய இந்திய தலைமை நீதிபதி: பி.ஆர் கவாயை நியமிக்க சஞ்சீவ் கன்னா பரிந்துரை.
* ‘ஹிந்து கோயில்களை நிர்வகிக்கும் குழுக்களில் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அரசு நியமிக்குமா? என்ற கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்குமாறு துஷார் மேத்தாவை பார்த்து உச்சநீதிமன்றம் கேள்வி.
* தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளில் 14,000 மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலராக நியமனம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு சட்டமுன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தார்
*அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் அறிவினை தமிழ்நாடு பயன்படுத்திக் கொள்ளும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அரசின் நிர்வாகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.
* எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு நடைமுறை சாத்தியமே, தெலங்கானா அரசு வழிகாட்டுகிறது என்கிறது தலையங்கம்.
* மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை, பாஜக திட்டமிட்டு ஏற்படுத்தியதாகும் – மம்தா குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால், குஜராத் வழியாக செல்ல வேண்டும், குஜராத் மாநிலத்தில் நடந்து வரும் காங்கிரஸ் தலைவர்களுடனான கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பேச்சு.
* மேனாள் ஒன்றிய அமைச்சரும், தேசிய ஜனநாயகக் கூட்டணி உடனான (NDA) உறவைத் துண்டித்து உள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) தலைவருமான பசுபதி குமார் பராஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மகாகத்பந்தனில் சேர வாய்ப்புள்ளது என தகவல்.
* கருநாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 விழுக்காடு முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாதிரியார் ஸ்டெயின்ஸ் கொலை; 25 ஆண்டுக்கு பிறகு குற்றவாளி விடுதலை. நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தி இந்து:
* அரசின் அனைத்து அறிவிப்புகளும் இனி தமிழில் மட்டுமே வெளியிடப்படும்; அரசுப் பணியாளர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்து போட வேண்டும்: தமிழ்நாடு அரசு உத்தரவு.
* தமிழ்நாடு அரசின் முயற்சிக்கு ஆதரவு: ஒன்றிய அரசு மாநில விவகாரங்களில் தேவையற்ற தலையீட்டை தவிர்த்து, கூட்டாட்சி உணர்வை நிலைநிறுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சி (SP) தலைவருமான அகிலேஷ் யாதவ் கூறினார்.
தி டெலிகிராப்:
* தமிழ்நாட்டில், பாஜக இன்னும் ஒரு சக்தியாக மாறவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு மாநிலத்தில் பாஜகவுக்கு தேவையான ஊன்றுகோலை அதிமுக வழங்குகிறது.
– குடந்தை கருணா