நீதிபதி குரியன் ஜோசப்
மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் தலைவராக தன்னை தேர்வு செய்ததை பெருமையாக கருதுவதாக மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார். மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம் எனவும், இந்த பணிக்காக எந்த ஊதியமும் பெற மாட்டேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வேண்டுகோளாக வைத்ததை அவரும் ஏற்றுக் கொண்டதாக குரியன் கூறியுள்ளார்.
தீப்பந்தம் பிடித்து
பெண்கள் போராட்டம்
ஒடிசாவில் கடந்த சில நாள்களாக பெண்கள் மாயமாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் மட்டும் 60,000 பெண்களும், குழந்தைகளும் காணாமல் போயிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. இதில், தீப்பந்தம் ஏந்தி பங்கேற்ற பெண்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கம் எழுப்பினர்.