ஆய்வு அறிக்கையில் தகவல்
புதுடில்லி, ஏப்.17- இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு வெறும் 15 நீதி பதிகள் மட்டுமே உள்ளனர் என்று புள்ளி விவரம் ஒன்று வெளியாகி உள்ளது.
15 நீதிபதிகள் மட்டுமே
இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால் 21 ஆயிரத்து 285 நீதிப திகள் மட்டுமே உள்ளனர். அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவி லேயே உள்ளனர். 1987 சட்ட ஆணைய பரிந்துரைப்படி 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
“உயர்நீதிமன்றங்களில் இந்த ஆண்டில் நீதிபதி பணியிடங் களில் 21 சதவீத காலியிடங்கள் இருப்பது, அவர்கள் மீது அதிக பணிச்சுமை ஏற்பட காரணமாக உள்ளது.மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள ஒரு நீதிபதி சராசரியாக 2 ஆயிரத்து 200 வழக்குகளை கவனிக்கிறார். அலகாபாத் மற்றும் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி தலா 15 ஆயிரம் வழக்குகளை விசாரிக்கிறார்.
பெண் நீதிபதிகள்
மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் ஒட்டு மொத்த பங்கு, 2017-ல் 30 சதவீ தத்தில் இருந்து 38.3 சதவீதமாக அதிகரித்துள்ளது, 2025-ல் உயர்நீதிமன்றங்களில் 11.4 சதவீ தத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரித்து உள் ளது.
உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தை ஒப்பிடும் போது, மாவட்ட நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. அங்கு 6 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ள னர். ஆனால் 15 உயர்நீதிமன்றங்களில் ஒரு பெண் தலைமை நீதிபதி மட்டுமே உள்ளார்.
மாவட்ட நீதித்துறையில், பழங் குடியின நீதிபதிகள் 5 சதவீதமாகவும், எஸ்.சி. பிரிவு நீதிபதிகள் 14 சதவீதமாக வும் உள்ளது. 2018 முதல் இதுவரை 698 உயர்நதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெறும் 37 நீதிபதிகள் மட்டுமே எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவை சேர்ந்த வர்கள்.இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு நீதிபதிகளின் பங்களிப்பு நீதித் துறையில் 25.6 சதவீதமாக உள்ளது.
கருநாடகம் முதலிடம்
சட்ட உதவிக்கான தேசிய தனி நபர் செலவு ஆண்டுக்கு ரூ.6.46 ஆகவும், நீதித்துறைக்கான தேசிய தனிநபர் செலவு ஆண்டுக்கு ரூ.182 ஆகவும் உள்ளது.
நீதி வழங்குவதில் 18 பெரிய மற்றும் நடுத்தர மாநிலங்களில் கருநாடகா முதலிடத்தில் உள்ளது, 2022 முதல் கர்நாடகம் இந்த முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது
ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் தமிழ் நாடு ஆகியவை கருநாடகா வைத் தொடர்ந்து பட்டியலில் அடுத்தடுத்த இடம் பிடிக்கின்றன இந்த 5 தென் மாநிலங்கள் சிறந்த பன்முகத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் பணியா ளர்கள் போன்றவற்றில் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல் படுகின்றன.
டாடா அறக்கட்டளை வேறு சில சமூக அமைப்புகளின் உதவி யுடன், இந்திய நீதி அறிக்கை-2025 என்ற பெயரில் புள்ளி விவரங்களை சேகரித்து இந்த தகவல்களை வெளியிட்டு உள்ளது. இந்திய நீதித்துறைக்கு தேவையான அடிப்படை மாற்றங்களை உடன டியாக நிறைவேற்றும் பொருட்டு இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர்….
சட்ட அமலாக்கத்தில் பாலின பன்முகத்தன்மையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் போதிலும், ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் கூட காவல்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான இலக்கை அடையவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
இந்திய காவல் துறையில் 2.4 லட்சம் பெண்கள் பணியில் உள் ளனர். அவர்களில், 960 பேர் மட்டுமே அய்.பி.எஸ். அதிகாரி் பதவிகளில் உள் ளனர். அதே நேரத்தில் 24 ஆயிரத்து 322 பேர் துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர் அல்லது துணை ஆய்வா ளர் போன்ற அய்.பி.எஸ். அதிகாரி அல்லாத பதவிகளை வகிக்கின்றனர்.
காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) தரத்திலான உயர் பதவிகளில் நாடு முழுவதும் 1000-க்கும் குறைவான பெண்களே பதவியில் உள்ளனர். காவல்துறையில் உள்ள மொத்த பெண்களில் 90 சதவீதம் பேர் காவலர் தரத்திலான கீழ் நிலை பணிகளில் உள்ளனர்.காவல்துறையில், எஸ்.சி. பிரிவினர் 17 சதவீதமாகவும், எஸ்.டி. பிரிவினர் 12 சதவீதமாகவும் உள்ளனர்.