தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல் 2 ஆம் வகுப்பு புத்தகத்தைக் கூடப் படிக்கத் தெரியாது என்று மூன்று பக்கத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநரே,
இந்தியாவில் எந்த மாநிலமும் தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை எட்ட முடியாது என்று 2023 ஆம் ஆண்டு யுடிஅய்எஸ்இ Unified District Information System for Education Plus (UDISE+) ஆய்வறிக்கை வெளியிட்டது தெரியுமா?
தெரியாவிட்டால், இவற்றைப் படித்து உங்கள் அறியாமையைப் போக்கிக் கொள்ளுங்கள்!
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரின் பள்ளி சேர்க்கை விகிதம் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஒப்பீடு!
இந்திய அளவில் தமிழ்நாட்டில்
பெண்கள் 28.50% 47.09%
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள் 25.08% 28.04%
தாழ்த்தப்பட்ட சமூக மாணவிகள் 26.00% 40.04%
பழங்குடியின சமூக மாணவர்கள் 21.04% 50.02%
பழங்குடியின சமூக மாணவிகள் 20.09 37.06%