மும்பை, ஏப்.17 மும்பையை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த தாராவி மக்களை, அதானிக்காக உலகிலேயே மிகப்பெரிய குப்பைக் கிடங்கான தேவனாருக்குத் துரத்த மகாராட்டிர மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது
அனைத்து எதிர்க்கட்சிகளின் கடுமை யான எதிர்ப்பையும் மீறி, தாராவி மறுசீர மைப்புத் திட்டம், அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போதே எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அம்மக்களை அடிமைகளாக வேறு ஒரு பகுதிக்கு மாற்றப் போகிறார்கள் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தில், 600 ஏக்கர் பரப்பளவிலான குடி சைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ள பகுதியை முதற்கட்டமாக கையகப்படுத்த அதானி குழுமத்திற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது
இந்த நிலையில் தாராவியில் உள்ள சுமார் 50,000 குடியிருப்பாளர்களை உலகி லேயே மிகப்பெரிய குப்பை கொட்டும் இடமான தேவனார் நிலப்பரப்பில் மீள்குடி யமர்த்துவதற்கான திட்டத்திற்கு மகாராட்டிரா அரசு ஒப்புதல் அளித்தது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியில் தெரியவந்துள்ளது
இது தொடர்பாக சுற்றுப்புறச்சூழல் வல்லுநர்கள் கூறும்போது, ‘‘இது மோச மான நடவடிக்கை ஆகும். உலகில் மிகப்பெரிய குப்பை கொட்டும் இடமான தேவனார் பகுதி, மனிதர்கள் குடியிருக்க எவ்விதத்திலும் சாத்தியமற்ற இடமாகும். மேலும் அப்பகுதியைச் சார்ந்த கடல் நீர் உள்வாங்கும் பகுதிகள் கடுமையாக மாசு பட்டு, மாங்குரோ காடுகள் முற்றிலும் அழிந்துள்ளன. இந்த நிலையில் அங்கு மனிதர்களைக் குடியிருக்க வைப்பது என்பது ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) வழிகாட்டுதல்களுக்கு முரணானது’’ என்று கூறியுள்ளனர்.
மக்களைக் குப்பைக் கிடங்கில் தள்ளும் மகாராட்டிர பி.ஜே.பி. ஆட்சி!
Leave a Comment