லால்குடி மாவட்ட கழக கலந்துரையாடல்

Viduthalai
1 Min Read

அரசியல்

லால்குடி, ஜூலை 4– 15.7.2023 திராவிடர் கழகம் நடத் தும் பெரியார் பயிற்சி பட்டறை சம்பந்தமாக வும், மற்றும் 8.7.2023 இளைஞர் அணி பொறுப் பாளர் முனைவர் வி. அன்பு ராஜாவின் இல்ல அறிமுக விழா நிகழ்ச்சி தொடர்பாகவும் லால் குடி மாவட்டத்தில் கலந் துரையாடல் கூட்டம்  2.7.2023 அன்று நடை பெற்றது.

இதில் லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர் தலைமை யில், மற்றும் மு.அட்டலிங்கம் மாவட்டத் துணைத் தலைவர், நி.சுப்பிரமணி யன் மாவட்ட ப.க. செய லாளர், மு.திருநாவுக்கரசு புள்ளம்பாடி ஒன்றிய தலைவர், க.ஆசைத்தம்பி மாவட்ட இளைஞரணி தலைவர் முன்னிலை வகித்தனர்.

தொடக்க உரை மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்துவும், கருத் துரை மற்றும் ஆலோ சனை மாநில அமைப்பா ளர் ப.ஆல்பர்ட் வழங்கி னார். ஒன்றிய தலைவர் சி.பிச்சைமணி நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

ஈரோடு பொதுக்குழு முடிவின்படி லால்குடி யில் 15.07.2023இல் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடத்த முடிவெடுக்கப்பட் டது. 8.7.2023இல் தமிழர் தலைவர் ஆசிரியர் வரு கையின்போது டோல் கேட்டில் இருந்து இளை ஞர்கள் மூலம் வரவேற்பு கொடுப்பது, தமிழர் தலைவர் வரும்பொழுது வரவேற்பு போஸ்ட் (மாவட்ட சார்பில்) அடித்து ஓட்டப்படும், ஈரோடு பொதுக்குழு தீர்மானப் படி மாவட்டத்தில் பகுத் தறிவாளர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை ஆகியவற்றை புதுப்பிப் பது, மாவட்டத்தில் உள்ள பழைய கிளை கழ கத்தை புதுப்பிப்பதோடு புதிய இளைஞர்களை அமைக்க ஒன்றிய பொறுப் பாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. லால்குடி மாவட்டத்தில் அங்கங்கு வைக்கம் போராட்ட நூற்றாண்டு, சேரன்மா தேவி குருகுல போராட்ட நூற்றாண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு ஆகிய விழா கூட்டங்கள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *