பெண்களே, மருத்துவக் காப்பீடு அவசியம்

2 Min Read

பொருளாதாரம் நாளுக்கு நாள் மாறிவரும் நிலையில், நமது வாழ்க்கை முறையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வசதிகள் அதிகரித்ததால் நாம் உடல் நலத்தில் கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். மருத்துவமனை செல வுகள் அதிகரித்துவிட்ட இந்த காலத் தில், அந்த செலவுகளை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற அனு பவம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கவே செய்கிறது. இந்த பழக் கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

மருத்துவச் செலவுகளுக்கு என்று பணம் சேர்த்து வைப்பதைவிட ஒரு மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள் வது புத்திசாலித்தனமாகும். குறைந்த செலவில் குடும்பத்தினர் அனைவருக் குமான மருத்துவ செலவுகளை இதன் மூலம் சமாளிக்கலாம். இந்த காப்பீடு தனித்தனியாகவும், குடும்பத்தினருக் கும் சேர்த்து புளோட்டர் என இரண்டு வகையிலும் கிடைக்கிறது. தனிநபர் பாலிசியில், காப்பீடு செய்பவர் மட்டும் கிளைம் செய்து கொள்ளலாம். புளோட் டர் பாலிசியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கிளைம் செய்து கொள்ளலாம்.

திருமணத்துக்கு முன்பு தனிநபர் பாலிசி எடுத்திருந்தால் திருமணத்துக்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளை யும் இணைத்துக் கொண்டு புளோட்டர் பாலிசியாக மாற்றிக்கொள்ளலாம். முதி யவர்களுக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் ஏற்படும். எனவே இவர் களை புளோட்டர் பாலிசியில் சேர்க் காமல் தனிதனி தனிநபர் பாலிசி எடுத்துக் கொள்வதும் நல்லது. 3 மாத குழந்தை முதல் 86 வயது வரை இந்த பாலிசி அனுமதிக்கப்படுகிறது. நமது மருத்துவ தேவைகளைப் பொறுத்து மருத்துவக் காப்பீட்டை முடிவு செய்ய வேண்டும். பிரீமியம் குறைவாக இருக் கிறது என்பதற்கான பாலிசியை தேர்ந் தெடுக்கக் கூடாது. பாலிசி மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து முடிவு செய்ய வேண்டும்.

பாலிசியின் வரம்புகளுக்கு ஏற்ப கிளைம் செய்து கொள்ளலாம். மருத்து வக் காப்பீட்டை அனுமதிக்கும் மருத்து வமனைகள் குறித்த விவரம் பாலிசி தாரர்களுக்குக் கொடுக்கப்படும். இந்த மருத்துவமனைகளில் உள்நோயாளி யாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் காப்பீட்டு தொகையில் இருந்து மருத்துவ செலவுகளை கழித் துக் கொள்வார்கள். புறநோயாளியாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத் துவ செலவை கிளைம் செய்து கொள்ள முடியாது. ஆனால் பாலிசி அனுமதிக் கும் பட்சத்தில் இதற்கு ஆகும் செலவு களையும் கிளைம் செய்து கொள்ள லாம். சில நோய்களுக்கு புற நோயாளி யாக தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்போம். சில நோய்களுக்கு மருத்துவ பரிசோதனை அடிக்கடி எடுக்க வேண்டியிருக்கும். மேலும் சில நோய்கள் மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் நீடிக்கும். இது போன்று நிலைமைகளில் பாலிசி அனுமதிக்கும் வரை கிளைம் செய்து கொள்ள முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *