தமிழ்நாட்டில்  உள்ள 90 அணைகளில் 130 டிஎம்சி நீர் கையிருப்பு அதிகாரி தகவல்

2 Min Read

சென்னை, ஏப். 15 தமிழ்நாட்டில் உள்ள 90 அணை கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 130 டி.எம். சி. நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

அணைகளில் 130 டி.எம்.சி. கையிருப்பு

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற் றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், பெரி யாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட் டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.  தற்போது 90 அணைகளிலும் சேர்த்து, 130.21 டி.எம்.சி. அதாவது 58.05 சதவீதம் நீர் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் கோடைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவாய்ப்பு இல்லை.  அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 75.02 டி.எம்.சி. ஈரோடு பவானிசாகரில் 13.15, கோவை பரம்பிக்குளத்தில் 7.81, சாத்தனூர் 3.29 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. பருவமழை மூலம் சேமிக்கப்பட்டுள்ள நீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. கோடை மழை நன்றாக பெய்தால் அணைகளில் மேலும் நீர்வரத்துக்கு வாய்ப்பு உள்ளது.

965 ஏரிகளில் நீர் இல்லை

தமிழ்நாட்டில் 14 ஆயிரத்து 140 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 762 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன. 2 ஆயிரத்து 542 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளன. 2 ஆயிரத்து 943 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேபோல், 3 ஆயிரத்து 690 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 3 ஆயிரத்து 238 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளது. 965 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டும் கிடக்கிறது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் 270 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. மொத்தம் உள்ள 6 நீர்நிலைகளிலும் சேர்த்து 9.27 டி.எம்.சி. கையிருப்பில் உள்ளது. அதேபோல், வரும் நாட்களில் கோடை மழை மூலம் பாசனத்திற்கு தேவையான நீரும் முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளது.  மேற்கண்ட தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *