சென்னை, ஜூலை4– மணிப்பூரில் அமைதி திரும்ப ஒன்றிய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஜூலை 11 அன்று சென்னையிலும், மாநிலம் முழுவதும் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடத்த ஒருமைப் பாட்டுக் கழகம் அறைகூவல் விடுத் துள்ளது.
அகில இந்திய சமாதான ஒரு மைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் ‘ஒன்றிய – மாநில உறவுகள்’ எனும் தலைப்பில் சென்னையில் கடந்த 1.7.2023 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்தில் தமிழ் நாடு திட்டக்குழு மேனாள் தலை வர் மு.நாகநாதன், ஒருமைப் பாட்டுக் கழகத்தின் தலைவர் பேரா. வி.பி.ஆத்ரேயா ஆகியோர் கருத்துரையாற்றினர்.
அரசமைப்பு சட்டத்தின் விதி களை மாற்றாமல், நிர்வாக உத்தர வுகள் மூலம் மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மொழி, தேசிய இனத்தின் அடிப்படையில் அமைந்த மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப் படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. நிதி, வரி, அரசு அதிகாரத்தை மாநிலங்களுக்கு பிரித்து தரும் வரையில் அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்த வேண் டும்.
மாநில அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வரக்கூடாது. இந்திய ஒன்றிய அரசு வலுவாக இருக்க வேண்டுமென்றால், மாநில அரசுகள் அனைத்து அதிகாரங் களையும் பெற்று வலுவாக செயல் பட வேண்டும்.
பன்முகத்தன்மை பாதுகாக் கப்பட வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில் ஜனநாயகத்தின் அனைத் துக் கூறுகளும் முடக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தின்படி உரு வாக்கப்பட்ட அனைத்து அமைப்பு களும் சிதைக்கப்பட்டுள்ளது என்று கருத்தாளர்கள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் அமைதி திரும்பிட தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும், தமிழ்நாடு மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியல் சட்டத்திற்கு எதிராக, மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய மோடி அரசு செயல்படுவதை கைவிட வேண்டும்; கூட்டாட்சி கோட் பாட்டை மதித்து செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் கருத்தரங்கில் நிறைவேற்றப் பட்டன.
இயக்கங்கள்
ஆக. 6 -_- 9ஆம் தேதிகளில் `ஹிரோஷிமா நாகசாகி தினத்தை முன்னிட்டு, அணு ஆயுதங்கள், போருக்கு எதிரான இயக்கங்களை நடத்த வேண்டும். ஆக.15 முதல் அக்.2 வரை அரசமைப்புச் சட் டத்தை பாதுகாத்திட நடைப் பயணம், கருத்தரங்கம் உள்ளிட்ட இயக்கங்களை நடத்திட வேண்டும். உலக சமாதான தினத்தை (செப்.21) முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு களை நடத்த ஒருமைப்பாட்டுக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இந்தக் கருத்தரங்கிற்கு சமா தான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநில தலைவர்கள் க.முத்தியாலு கே.சி.கோபிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநிலத் தலைவர் ஜி.முரளி, துணைத் தலைவர் வ. பிரமிளா ஆகியோர் வரவேற்றனர்.
மாநில பொதுச்செயலாளர்கள் ஏ.ஆறுமுக நயினார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் உள்ளிட்டோர் பேசினர். துணைச் செயலாளர் பா.செந்தில் குமார் நன்றி கூறினார்.