மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: மேலும் 12 பேர் கைது

2 Min Read

ஹவுரா, ஏப். 14- மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட் டத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடா்பாக மேலும் 12 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை நேற்று (13.4.2025) தெரிவித்தது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக் கூடிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக 11.4.2025 அன்று போராட்டம் நடைபெற்றது. 12.4.2025 அன்று காலை வரை நீடித்த இந்தப் போராட்டம் பல்வேறு இடங்களில் வன்முறையாக மாறியது.

காவல்துறை வாகனங்கள் உள்பட சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராள மான வாகனங்களுக்கு போராட் டக்காரா்கள் தீ வைத்தனா். ஜாப் ராபாதில் வீடு ஒன்றுக்குள் புகுந்து வன்முறையாளா்கள் தாக்கியதில் தந்தை, மகன் கொல்லப்பட்டனா். ரயில்கள் மீதும் கற்கள் வீசப்பட் டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்புப் படையினா் துப் பாக்கிச்சூடு நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அய்சாஸ் மோமின்(21) 12.4.2025 அன்று உயிரி ழந்தார்.

சுமார் 18 காவலா்கள் காயம டைந்த இந்த வன்முறையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேரை கைது செய்திருப்பதாக காவல் துறையினா் நேற்று (13.4.2025) தெரிவித்தனா். பாது காப்புப் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள இச்சூழலில், மாவட்டத்தில் புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மூத்த காவல் துறை அதிகாரியொருவா் மேலும் கூறுகையில், ‘மாவட்டத்தின் சுதி, துலியன், சம்சோ்கஞ்ச், ஜாங்கிபூா் ஆகிய பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இரவு முழுவதும் சோதனைகள் தொடா்ந்தன. மேலும் 12 போ் கைது செய்யப்பட்டனா்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்)163-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இணையச் சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். முக்கிய இடங் களில் ரோந்து நடவடிக்கையும் முடக்கிவிடப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை தொடா்வதால் மேலும் பலா் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *