வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப்.16-இல் விசாரணை

1 Min Read

புதுடில்லி, ஏப். 14- வக்பு திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட மனுக்கள் வரும் 16-ஆம் தேதியன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கி 3 நீதிபதிகள் அமா்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது.

மனுக்கள் விசாரணை

திருத்தச் சட்டத்துக்கு எதிராக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனு மட்டுமின்றி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கான், சிவில் உரிமைகள் பாதுகாப்புக்கான சங்கம், அா்ஷத் மதானி, சமஸ்த கேரள ஜாமியாதுல் உலாமா அமைப்பு, அஞ்சும் கதாரி, தயீப் கான் சல்மானி, முகமது சபி, முகமது பஸ்லுர்ரஹிம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூத்த தலைவா் மனோஜ் குமார் ஜா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனி ஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் மனுத் தாக்கல் செய்துள்ளன. மேலும் சில மனுக்கள் விசாரணைக்குப் பட்டி யலிடப்பட வேண்டியுள்ளதாக உச்சநீதிமன்ற பதிவுத் துறை தெரி வித்துள்ளது.

ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்பு சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதியும், மாநிலங்களவையும் ஏப்ரல் 4-ஆம் தேதியும் அதிகாலையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு ஏப்ரல் 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார். அதைத் தொடா்ந்து இந்தச் சட்டம் நாடு முழுமைக்கும் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததாக ஒன்றிய அரசு சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒன்றிய அரசு ஏப்ரல் 8-ஆம் தேதி கேவியட் மனு தாக்கல் செய்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *