மாதவிடாய்

Viduthalai
1 Min Read

பூப்பெய்திய மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுதவைத்த நிகழ்வு சில நாள்களுக்கு முன்பு பேசுபொருளானது. மாதவிடாய் பற்றிய சரியான புரிதலும், அடிப்படை மனிதநேயமும் இல்லாததன் விளைவாகத்தான் இத்தகைய செயல்கள் நடக்கின்றன எனலாம்.
கீதா இளங்கோவன் இயக்கத்தில் வெளியாகி ‘ஆண்களுக்கான பெண்களின் படமாக’ கொண்டாடப்பட்டு வரும் ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் உட்பட அனைவரின் பார்வையுடன் சமூகத்தில் நிலவும் பல்வேறு கொடுமைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனை அனைவரும் பார்க்கவேண்டியது அவசியம். இதனை உருவாக்கிய இயக்குநர் உள்பட படைப்பாளர்கள் அனைவருக்கும் ‘Periyar Vision OTT’-க்கும் நன்றி.
– மரகதம்

Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *