ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
புதுடில்லி, ஏப். 12- வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர் களுக்கு கடன் தள்ளுபடி வழங்க மறுப்பது துரோகம் என ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கண் டனம் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி கனமழையுடன், கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 200-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர்.
மேலும் 32 பேர் காணாமல் போனார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் காயம் அடைந்தனர். ஆயிரக்க ணக்கானோர் வீடுகளை இழந்தனர்.
தள்ளுபடி இல்லை
வயநாடு நிலச்சரிவை தொடர்ந்து கேரளா பேரிடர் தடுப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தாமாகவே எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணையின்போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய முடியுமா? என்பது குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
இந்தவழக்கில் பதில் அளித்து ஒன்றிய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், “வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது. அதற்கு பதிலாக, இயற்கை பேரிடர்கள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதல் களின்படி அவை மறுசீரமைக்கப்படும்” என கூறப்பட் டது.
துரோகம்
இதற்கு வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள் ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகள், வாழ்வாதாரங்கள் என அனைத்தையும் இழந்து விட்டனர். ஆனாலும், கடன் தள்ளுபடி கூட வழங்க அரசாங்கம் மறுக்கிறது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு வெறும் கடன் மறுசீரமைப்பு மட்டுமே கிடைக்கிறது. இது நிவாரணம் அல்ல – இது ஒருதுரோகம். இந்த அக்கறையின்மையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், வயநாட்டில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். அவர்களின் வலி புறக்கணிக் கப்படாது. நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.