அதிமுக – பிஜேபி கூட்டணி தொடக்கத்திலேயே குழப்பமோ குழப்பம்!

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப்.12- அதிமுக கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்ட கடைசி நேர பரபரப் பால் பேட்டி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் திரைவாசகங்கள் அய்ந்து முறை மாற்றப்பட்டன.
அமித்ஷா தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்குள் நேற்று (11.4.2025) காலை 10 மணி முதல் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பேட்டி அளிக்கப்பட இருந்த அரங்கில் உள்ள மேடையில் ஏழு இருக் கைகள் போடப்பட்டு அதன் பின்னணியில் ஒளிர்ந்த டிஜிட்டல் திரைப் பேனரில் தேசிய ஜனநாயக கூட்டணி என்று ஆங்கிலத்தில் வாசகம் இடம் பெற்றிருந்தது. எனவே அதிமுக மற்றும் ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலை வர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரும் ஓட்டலுக்கு வரவில்லை.
இந்த சூழலில் அமித்ஷா ஓட்டலில் இருந்து புறப்பட்டார். அவர் மயிலாப்பூர் சென்று ஆடிட்டர் குருமூர்த்தியைச் சந் தித்துப் பேசினார். இந்த நேரத்தில் ஓட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு அறையின் டிஜிட்டல் பேனரில் ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்ற வாசகம் மாற்றப்பட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி-ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற்றது. இதனால் அதிமுக கூட்டணி உறுதியாகவில்லை என்று பரபரப்பாக பேசப்பட்டது. அமித்ஷாவின் பேட்டியும் தள்ளிக் கொண்டே போனது.

பேட்டி நடைபெற இருந்த டிஜிட்டல் திரையில் இருந்த வாசகம் திடீரென்று நீக்கப்பட்டு பொதுவான காட்சி வைக்கப்பட்டது. இதனால் அமித்ஷா பேட்டி ரத்து கூட்டணி உறுதி செய்யாமல் அவர் டில்லி திரும்புகிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி ஊடகங்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டன.
டிஜிட்டல் திரையில் பாஜக கொடி இடம்பெற்றது. பரபரப்புக்கிடையே மதியம் 2 மணிக்கு மாநில பிஜேபி தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வேட்பு மனு அளித்தார்; வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் தமிழக பிஜேபியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. தமிழக பிஜேபி தலைவர் மாற்றப்படும் தகவல் உறுதியானதால் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வைச் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச் சாமி வரும் தகவல் வெளி யானது. இதைத் தொடர்ந்து அமித்ஷா பேட்டி அளிக்க இருந்த அறையில் டிஜிட்டல் பேனல் முதலில் இடம் பெற்று இருந்த தேசிய ஜனநாயக கூட் டணி என்ற வாசகம் மீண்டும் இடம்பெற்றது. அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் மீண்டும் பரபரப் பானது. அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணியை அமித்ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தினார். டிஜிட்டல் பேனரில் அய்ந்து முறை வாசகம் மாற்றப் பட்டது. அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுவதில் இவ்வளவு குழப்பமா என்று தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *