திருவண்ணாமலை. ஏப்.12- ஒன்றிய அரசு உடனடியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில்…
திருவண்ணாமலைக்கு நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களை சட்டமாக்கி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இது இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இதனை நாங்கள் வரவேற்று பாராட்டுகிறோம்.
‘நீட்’ விலக்கு மசோதாக்கள்
அதேபோல் நீட் விலக்கு மசோதாக்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநர் மூலம் அனுப்பியதை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனையும் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு எடுத்துச் செல்லும், உச்சநீதிமன்றம் நீட் விலக்கு மசோதாவிலும் நமக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழ்நாட்டில் பா.ஜனதா முதலில் கூட்டணியை உருவாக்கட்டும். அவர்கள் எந்த கூட்டணியில் இருக்கிறார்கள், எப்படி கூட்டணியை உருவாக்கப் போகிறார்கள் என்பதே இன்னும் பா.ஜனதாகாரர்களுக்கே தெரியவில்லை. தமிழ்நாட்டு தலைவரை மாற்றப்போகிறார்கள்.
யாரை புதிதாக போடப் போகிறார்கள் என்கிற பதற்றமே அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையில் 2026இல் தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று சொல்வது நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் மறுவரை யறை நடத்துவது என்பது இயலாத ஒன்று. ஆகவே முத லில் மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்த வேண்டும். அதுவும் ஜாதிவாரி அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
கச்சத்தீவு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.