டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மீண்டும் பாஜக பிடியில் சிக்கியது அதிமுக! பாஜக-அதிமுக கூட்டணி உறுதியானது; எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அமித்ஷா சென்னையில் அறிவிப்பு.
*பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.
* தமிழ்நாட்டுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்: பழனிசாமிக்கு பேசக்கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிப்பு, கனிமொழி எம்.பி சாடல். கூட்டணியில் இருந்து விலகினாலும் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் தொடர்ச்சியாக கூறி வந்தது உண்மை என இன்று அம்பலமாகியுள்ளது என அதிமுக – பாஜக கூட்டணி குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
*மக்களின் அடிப்படை உரிமைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும், உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
* ஆர்.எஸ்.எஸ்.-இன் சமூக சேவைப் பிரிவான ராஷ்ட்ரிய சேவா பாரதி ஏற்பாடு செய்யவிருக்கும் ஒரு நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும், டில்லி பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு.
* வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமானது பிரதமர் மோடியின் மற்றொரு பொய் வாக்குறுதி. இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்து சுமார் ஒரு ஆண்டு ஆகிறது. அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடியை அரசு திருப்பி அனுப்பியுள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டம்.
* நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் (ஜீரோ ஹவர்) கேட்கப்படும் கேள்விகளுக்கு, மோடி அரசாங்கத்தின் பதில்கள் எந்த லட்சணத்தில் இருந்தது என பத்து கேள்வி – பதில்களை பட்டிய லிட்டு காட்டியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரைக் ஓ பிரையன்.
தி இந்து:
*அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 125 விழுக்காடு வரி விதித்தது; சீனா மீது டிரம்ப் அரசு விதித்த 145 விழுக்காடு வரிக்கு பதிலடி.
* கருநாடக அரசு பத்தாண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தற்போது அமைச்சரவை ஏற்றுக் கொண்டது. ஏப்ரல் 17 அன்று அமைச்சரவை இறுதியாக ஜாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தகவல்.
– குடந்தை கருணா