சென்னை, ஏப்.12- போதைப்பொருள் குற்ற வாளிகள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ செயலியை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இணை காவல்துறை ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார்.
சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் டாக்டர் விஜய குமார் 10.4.2025 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:
மெத்த பெட்டமைன்’ என்ற அபாயகரமான போதைப்பொருள் வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப் படுவது தெரிய வந்தது.
சென்னையில் இந்த போதைப்பொருள் தயாரிக்கப்படுவது இல்லை. இந்த போதைப்பொருள் பெங்களுருவை மய்யமாக வைத்து விற்கப்படுவது கண்டறியப் பட்டது. இதனால் தனிப் படை காவல்துறையினர் பெங்களூரு சென்று நட வடிக்கையில் ஈடுபட்டனர்.
நைஜீரிய கும்பல்
கடந்த ஒரு மாதத் தில் மட்டும் 17 போதைப் பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள்.
ஒருவர் சூடான் நாட்டுக்காரர். இவர்கள் அனைவரும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் ஆவார்கள். முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நைஜீரிய நாட்டில் இருப்பது கண் டறியப்பட்டுள்ளது. அவர் களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கைதான போதைப் பொருள் கும்பலிடம் இருந்து 40 கிராம் ‘மெத்த பெட்டமைன்’ போதைப் பொருள் கைப்பற்றப் பட்டுள்ளது.
கைதான நைஜீரியர்க ளில் 2 பேர் கல்லூரி மாணவர்கள். ஒரு கிலோ ‘மெத ்தபெட்ட மைன்’ போதைப்பொருள் ரூ.1 கோடி வரை விற்கப்படு கிறது.
கிரிண்டர்’ செயலிக்கு தடை
போதைப்பொருள் குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டால் 8 பேர் ‘கிரிண்டர் ‘செயலியை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். எனவே இந்த செயலியை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை ஆணையர் அருண் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திருவல்லிக்கேணி துணை அணையர் ஜெயச்சந்திரன் உடனிருந்தார்.