மதுரை,சென்னையில் விரைவில் அரசு செயற்கை கருத்தரித்தல் மய்யங்கள் – தமிழ்நாடு அரசு தகவல்

Viduthalai
2 Min Read

மதுரை,ஜூலை5– தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை, சென் னையில் விரைவில் அரசு செயற்கை கருத்தரித்தல் மய்யங் கள் வரும் செப்டம்பரில் அமைக்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட தனியார் செயற்கை கருத்தரித்தல் மய்யங்கள் உள்ள நிலையில், அரசு மருத்து வமனைகளில் ஒன்றில்கூட இந்த வசதியில்லை என்று மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் யு.வெரோனிகா மேரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தி ருந்தார். இந்நிலையில் மதுரை, சென்னை அரசு மருத்துவ மனைகளில் செயற்கை கருத்தரித்தல் மய்யங்கள் வரும் செப்டம்பரில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் குழந்தையின்மை பிரச்சினையால் 2.75 கோடி இணையர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்ததுள்ளது. குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் 6 இணை யர்களில் ஓர் இணையர் குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். 

2021 ஆண்டு நிலவரப்படி சென்னையில் 59, கோயம் புத்தூரில் 14, மதுரையில் 11 மய்யங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 155 தனியார் செயற்கை கருத்தரித்தல் மய்யங் கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். ஆனால், மாநிலம் முழுவதும் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 38 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஒன்றில்கூட செயற்கை கருத்தரித்தல் மய்யம் இல்லை.

இந்நிலையில், மதுரை கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், பெண்ணுரிமை செயற்பாட்டா ளருமான யு.வெரோனிகா மேரி, தமிழ்நாடு அரசு மருத்துவ மனைகளில் செயற்கை கருத்தரித்தல் மய்யம் உள்ளதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அதற்கு அதிகாரிகள் தரப்பில் அளிக்கப் பட்ட பதில் மூலம் எந்த அரசு மருத்துவமனையிலும் இந்த மய்யம் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மய் யத்தை தொடங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி செலவில் வரும் செப்டம்பரில் செயற்கை கருத்தரித்தல் மய்யம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *