வருஷப் பிறப்பு என்பது பற்றி மிகவும் மோசமாகவே புராணக் கூற்றுப்படி காணப்படுகிறது. அதாவது, ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ண மூர்த்தியைப் பார்த்து `நீர் அறுபதனாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலா காதா என்ன?’ அதற்குக் கண்ணன் `நான் இல்லாப் பெண்ணை வரிக்க’என, அதற்கு உடன்பட்டு எல்லா வீடுகளிலும் பார்த்துவர, இவர் இல்லா விடு கிடைக்காததனால் கண்ணனிடம் வந்து அவர் திருமேனி யில் மய்யல் கொண்டு `நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து வரிக்க எண்ணங்கொண்டேன்’ என்றனன்.
கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானம் செய்ய ஏவ முனிவர் அவ்வாறே செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கிரீடித்து அறுபது குமாரர்களைப் பெற அவர்கள் பெயரே பிரபவ முதல் அட்சய முடிய இறுதியானார்களாம். இவர்கள் யாவரும் வருடமாய்ப் பதம் பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு கேவலமான ஆபாசமான , அறிவுக்குப் பொருத்தமற்ற அடிப்படைகளைக் கொண்ட வருஷப் பிறப்பைக் கொண்டாடுபவர்களைப் பற்றி நாம் என்ன நினைப்பது?