ஆவடி, ஏப். 11- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.4.2025 மாலை 5.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளி கையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில், வழக்குரைஞர் பன்னீர்செல்வம் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட செயலாளர் க.இளவரசன் வரவேற் புரையுடன் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
மார்ச் மாதம் ஆவடி மாவட்ட கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டங்களின் வரவு – செலவு கணக்கை திருமுல்லைவாயில் பகுதி கூட்டத்திற்காக மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு, திருவேற்காடு பகுதி கூட்டத்திற்காக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ச.சென்னகிருட்டிணன் ஆகியோர் ஒப்படைத்தனர்.பின்னர் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் அவர்கள் கீழ் கண்ட தீர்மானங்களை முன்மொழிந்தார்.
தீர்மானங்கள்
ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருமுல்லைவாயில் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் கழக பொதுக்குழு தீர்மான விளக்க கூட்டங்களை சிறப்பாக முன்னின்று நடத்திய மாவட்ட இளைஞரணித் தோழர்களுக்கு பாராட்டும் வாழ்த்துப் தெரிவிக்கப்பட்டது.
தலைமைக் கழக உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள கழக கொடிக்கம்பங் களை அகற்றி வாய்ப்பு உள்ள கழகத் தோழர்களின் இல்லங்களில் நிறுவுவது.
உண்மை வாசகர் வட்டம் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தும் நோக்கில் ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத்திற்கு ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன் தலைவராகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திராவிட மணி செயலாளராகவும், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திக்கேயன் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
விடுதலை சந்தாக்களை காலவரையின்றி தொடர்ந்து சேகரித்து வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்நாளை நீட்டிக்க அனைவரும் உறுதி ஏற்று தீவிரமாக செயல்படுவது.
14-04-2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது.
தலைமைக் கழக உத்தரவுப்படி ஆவடி மாவட்டத்தில் செம்பரம் பாக்கம், தாங்கல், குமணன் சாவடி, கோயில் பதாகை, திருவேற்காடு, பாடி, கொரட்டூர், முகப்பேர் ஆகிய பகுதிகளில் கிளைக் கழகங்களை உருவாக்கி பொறுப்பாளர்களை நியமித்து தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் கிடைத்ததும் அறிவித்து மாவட்ட கழக வளர்ச்சியை தீவிரப் படுத்துதல்
மேற்கண்ட தீர்மானங்களை வழிமொழிந்து மாவட்ட துணைத் தலைவர் மு.ரகுபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன், செயலாளர் க.கார்த்திக்கேயன், மாவட்ட மகளிரணி செயலாளர் சி.ஜெயந்தி,ஆவடி நகர தலைவர் கோ.முருகன், செயலாளர் இ.தமிழ்மணி, திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன், பெரியார் பெருந் தொண்டர் துரை.முத்துகிருட்டிணன் ஆகியோர் உரையாற்றினர்.
மார்ச் 20. அன்று பிறந்த நாள் கண்ட ஆவடி மாவட்ட துணைத் தலைவர் மு.ரகுபதி, மார்ச் 22. அன்று பிறந்த நாள் கண்ட ராணி ரகுபதி, இளைஞரணி கூட்டத்தை சிறப்பாக முன்னின்று நடத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் வி.சோபன்பாபு, துணை செயலாளர் ச.சென்னகிருட்டிணன் ஆகியோருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்து பயனாடை அணிவித் தார்.
கூட்டத்தில் ராணி ரகுபதி, புஷ்பா பன்னீர்செல்வம், ஆவடி நகர துணைத் தலைவர் சி.வச்சிரவேல், பூவிருந்தவல்லி பகுதி தலைவர் பெரியார் மாணாக்கன், பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், ஆவடி மாவட்ட மேனாள் செயலாளர் சு.சிவகுமார், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.வெங்கடேசன், ஆவடி நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அயப்பாக்கம் அரிகிருஷ்ணன் ஏற்பாட்டில் சிறுதானிய உணவு வழங்கப்பட்டது. இறுதியாக ஆவடி மாவட்ட துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.