டெக்கான் கிரானிக்கல், சென்னை
* நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* காந்தியத்திற்கும், கோட்சே கும்பலுக்கும் இடையே நடக்கும் போட்டி; தெலங்கானாவில் பாஜக கால் பதிக்க விட மாட்டோம், முதலமைச்சர் ரேவந்த் உறுதி.
* மகாராட்டிரா மாநில தேர்தலில் மோசடி நடந்துள்ளது; மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்பட வேண்டும், காங்கிரஸ் செயற்குழுவில் மல்லிகார்ஜூனா கார்கே முழக்கம்.
* தெலங்கானாவில் ஜாதி கணக்கெடுப்பு மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது புரட்சிகர முடிவு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்துக்கு ராகுல் பாராட்டு.
* சீனா மீது 125 சதவீத வரி விதித்தார் டிரம்ப். பிற நாடுகளுக்கு வரியில் சிறு சலுகை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்; ஜாதி அரசியல்தான் கூடாது என்கிறார் ஒன்றிய அமைச்சரும் எல்ஜேபி (ஆர்வி) தலைவருமான சிராஜ் பஸ்வான்.
* ‘பொருளாதார புயல் வருகிறது, பிரதமர் மோடி எங்கே’ என ராகுல் காந்தி கேள்வி.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ஜோதிராவ் புலே பற்றிய திரைப்படத்தில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஜாதி பெயர்களை நீக்கிட பார்ப்பன சங்கம் அழுத்தம்; நீக்கிட தணிக்கை வாரியல் வலியுறுத்தல்.
தி இந்து
* உ.பி. முசாபர்நகர் இஸ்லாமியர்கள் 300 பேருக்கு தாக்கீது; வக்பு சட்டத்தை எதிர்த்து கருப்புப் பட்டை அணிந்திருந்தார்களாம். வக்பு (திருத்த) சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது கருப்பு கைப்பட்டை அணிந்ததற்காக தலா ரூ.2 லட்சம் பிணைத் தொகையை வழங்குமாறு ஆணை.
* ஆளுநர் அதிகாரம் குறித்த தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, ஆறு புதிய மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெற முடியும் என கேரள அரசு நம்பிக்கை.
* ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்த பின்னணியில், கருநாடக அமைச்சரவை விவாதித்து ஆளுநர் தவார்சந்த் கெலாட் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து விரைவில் முடிவு.
* தமிழ்நாடு ஆளுநரால் தடுத்து நிறுத்தப்பட்ட மசோதாக்களை “செயல்படுத்த” உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் முகத்தில் விழுந்த “அறை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு.
– குடந்தை கருணா