சென்னை, ஏப்.10 தமிழ்நாடு வரும் அமித்ஷாவை எதிர்த்து போராட்டம் நடத்தப் படும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையொட்டி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன, இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமித்ஷா தமிழ்நாட்டிற்கு இன்று (10.4.2025) வருகிறார். அவருக்கு எதிராக நாளை (11.4.2025) காலை சென்னை மயிலாப்பூரில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.