மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா,ஜூலை 5- மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டிவிடும் முயற்சியை பாஜக மேற் கொண்டு வருவதாக மாநில முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டினார்.
மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 8-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறையில் 10 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் முதலமைச்சர் மம்தா பயணம் செய்த ஹெலி காப்டர் சிலிகுரி அருகே அவ சரமாகத் தரையிறக்கப்பட்டது. அதில் அவர் லேசாக காயமடைந் தார். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தை காணொலி வாயிலாக அவர் நடத்தி வருகிறார்.
பிர்பூம் மாவட்டத்தில் உள்ள துப்ராஜ்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி யின் தேர்தல் பிரசாரக் கூட்டம் 3.7.2023 நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக அக்கட் சியின் தலைவர் மம்தா பேசிய தாவது: பிளவுபடுத்தும் அரசி யல் மூலம் காஷ்மீர், மணிப்பூரை நாசமாக்கிய பாஜக, தற்போது மேற்கு வங்கம் நோக்கி திரும்பி யுள்ளது. தனது அரசியல் சுய லாபத்துக்காக மாநிலத்தைப் பிளவுபடுத்த பிரிவினைவாத குழுக்களை பாஜக தூண்டி விடுகிறது. இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அத்தகைய சக்திகளின் முயற் சியைத் தோற்கடிக்கப்போம்.
வீட்டு வசதித் திட்டம், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான நிதியை விடுவிக்காமல் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. அந்த நிதி பாஜகவுக்கோ ஒன்றிய அர சுக்கோ சொந்தமானது அல்ல. நம்மிடம் வரியாக வசூலிக்கும் நிதியை ஒன்றிய அரசு திரும்ப அளிக்க வேண்டும் என்றார் அவர்.