கன்னியாகுமரி, ஏப்.9- குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு மா.மு.சுப்பிரமணியம் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள், காப்பாளர் ம.தயாளன், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைச் செயலாளர் சி. அய்சக் நியூட்டன் இளை ஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, தோழர்கள் எ.ச.காந்தி, அந்தோனி பெனடிக்ட், கலைப்பிரியன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
தந்தை பெரியாருடைய கொள்கை நூல்கள், கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் மக் களுக்கு வழங்கப்பட்டன.