ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
2 Min Read

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

5.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மருத்துவப் படிப்பில் 15 சதவீத பொதுப் போட்டி இடங்களை நீக்கி, தெலங்கானா மாணவர்களுக்கு முன்னு ரிமை வழங்க கே.சி.ஆர். அரசு முடிவு. இதன் மூலம் 520 இடங்கள் அம்மாநில மாணவர்களுக்கு கூடுதலாக கிடைக்கும்.

* ஒன்றிய அமைச்சரவை மாற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநில தலைவர்களை பாஜக மேலிடம் மாற்றி உள்ளது ஒன்றிய அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மற்றும் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு புதிய பொறுப்பு தரப் பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜோசியரை அணுகி ஆருடம் பார்ப்பது நல்லது, தமிழ்நாடு ஆளுநருக்கு அறிவுரை

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் அனுமதித்தால், அம்மாநில சமத்துவ வளர்ச்சி நோக்கியதாகவும், இந்தியா முழுமைக்கும் கணக்கெடுப்பு நடத்த அடித்தளமாகவும் அமையும் என பேராசிரியர் சரண், வழக்குரைஞர் ஸ்வரூப் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடியின் ஆட்சியில் நாடாளுமன்றக் கூட்டங் களின் ‘குறைந்து வரும்’ காலம் குறித்தும்,  முக்கியமான பிரச்சனைகள் மீதான விவாதத்தின் தரம் குறைந்துள்ளது குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினாய் விஸ் வம், பிரதமர் மோடிக்கு கடிதம்.

தி இந்து:

* விலைவாசி உயர்வு தொடர்பாக மோடி அரசை காங்கிரஸ் கண்டித்து, பாஜக தலைமையகத்திற்கு வெளியே திடீர் போராட்டத்தை காங்கிரஸ் நடத்தியது. ‘மெஹங்காய் மேன்’ (விலைவாசி மனிதன்) என்று அழைக் கப்படும் மன்னர் நரேந்திர மோடி’ என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினாட் கிண்டல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பொது சிவில் சட்டத்திற்கு ஆம் ஆத்மி ஆதரவு தந்த நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு.

* மேகதாது அணை விவகாரம் குறித்து ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க தமிழ்நாடு அமைச்சர் துரை முருகன் டில்லி புறப்பட்டார்.

தி டெலிகிராப்:

பொது சிவில் சட்டம் சிறுபான்மையினரின் நலனுக்கு எதிரானது என மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா கண்டனம்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *