பரஸ்பர வரி விவகாரம் அமெரிக்காவின் அழுத்தம் இந்தியாவுக்கு பாதிப்பு ஒன்றிய அரசின் மீது காங்கிரஸ் தாக்கு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஏப்.8- அமெரிக்க அழுத்தத் தால் இந்தியாவின் நலன்கள் பறிகொடுக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டி யுள்ளது.

சச்சின் பைலட் பேட்டி

பரஸ்பர வரி அடிப் படையில் இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ளார். இது இந்தியாவின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும், பிரதமர் மோடியும் இந்தியாவின் நலன்களை பறிகொடுக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருக்கிறது.
இது தொடர்பாக கட்சி யின் பொதுச்செயலாளர் சச் சின் பைலட், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆக்கப்பூர்வ தீர்வு

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு உலகநாடுகள் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இந்திய அரசு அதை ஏற்பதும், விதியின் மீது பழிபோடுவதுமாக இருக்கிறது.

பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் அதிபர் டிரம்பை சந்தித்தபோது, வெறும் போட்டோ எடுத்ததும், பரிசுகளை பரிமா றிக்கொண்டதுமாக இல்லாமல் இந்த விவகாரத்தில் கொஞ்சம் ஆக்கப்பூர்வதீர்வை கண்டிருக்க வேண்டும்.

இரு தலைவர்களும் கூறுவது போல நமது உறவுகள் வலுமாக இருக்கிறதென்றால், இவ்வளவு அதிக வரி நம்மீது விதிக்கப்பட்டு இருக்காது. இந்த வரியால் நமது ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும், உற்பத்தி சரியும். சிறு, குறு, நடுத்தர தொழில்துறை பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது.

வேலை இழப்புகள்

இதன் விளைவாக ஏற்படும் பணி நீக்கங்கள் மற்றும் வேலை இழப்புகள் காரணமாக பொருளாதாரம் கடுமையான அழுத்தத்தை எதிர் கொள்ளும். ஆனால், கெட்டவாய்ப்பாக இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதற்கான போதுமான பதில் அல்லது அறிகுறி கூட நமக்கு கிடைக்கவில்லை.
ஒன்றிய அரசு தூங்குகிறது

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு நமது நலன்களை தியாகம் செய்துள்ளதாக தெரிகிறது. பல அய்ரோப்பிய நாடுகள் பதிலடி கொடுத்து வருகின்றன. உலக வர்த்தக நிறுவனத்தில் அமெரிக்கா மீது சீனா சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க இருக்கிறது.
அய்ரோப்பிய நாடுகள் பதிலடி குறித்து பேசும்போது, கனடா, மெக்சிகோ நாடுகள் பதிலடி வரியை அறிவித்து இருக்கும்போது, நாம் மட்டும் இன்றும் எதுவும் கூறவில்லை.

எனவே அரசு என்ன செய்யப் போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த வர்த்தகப் போரால் பணவீக்கம், உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் என எதுவாக இருந்தாலும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்தப்போகின் றன என்பது தெளிவாகிறது.

ஆனால், நாடாளு மன்றம் நடந்து கொண்டிருந்தபோதிலும், இந்திய நலன்களை எவ்வாறு பாதுகாப்பது? என்பது குறித்து அரசிடமிருந்து போதுமான பதிலையோ அல்லது உத்தரவாதத்தையோ நாம் காணவில்லை. இந்த மவுனம் நிச்சயமற்ற தன்மையை அதிக ரிக்கிறது.
இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

வக்பு திருத்த சட்டம்

நாட்டில் இந்து-முஸ்லிம் தொடர்பாக மீண்டும் ஒரு விவாதத்தை கிளப்பவே வக்பு திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு அவசர அவசரமாக கொண்டு வந்திருப்பதாக குற்றம் சாட்டிய சச்சின் பைலட், மணிப்பூர் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், சீன ஆக்கிரமிப்பு, விலை வாசி உயர்வு உள்ளிட்ட உண் மையான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கான பா.ஜனதா வின் பழைய தந்திரம் இது என்றும் அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *