பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம்

2 Min Read

சண்டிகர், ஏப்.6- பஞ்சாப் -அரியானா எல்லையில் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிராக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் உருவப் பொம்மையை எரித்து விவசாயிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள், பஞ்சாப் -ஹரியானா எல்லையில் உள்ள கனெவுரி- ஷம்பு ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்முதல் முகாமிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், சண்டீகரில் ஒன்றிய அமைச்சா்கள் சிவராஜ் சிங் சவுஹான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் ஆகியோா் அடங்கிய ஒன்றிய குழுவுடன் விவசாயிகள் கடந்த 2.4.2025 அன்று பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சு வாா்த்தையைத் தொடா்ந்து போராட்டக் களத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஜகஜித் சிங் தல்லேவால், ஸ்வரண் சிங் பாந்தோ் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவா்களை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா்.

அதே வேளையில், கனெவுரி -ஷம்பு எல்லைகளில் முகாமிட் டிருந்த விவசாயிகள் மற்றும் அவா்களின் கூடாரங்களை காவல் துறையினா் அப்புறப்படுத்தினா்.
கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப் பட்டுள்ள விவசாயத் தலைவா்களை சக பிரதிநிதிகள் சந்தித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘சுமாா் 125 விவசாயிகள் பாட்டியாலா சிறையிலும், 150 போ் நாபா சிறையிலும், 40 போ் சங்ரூா் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா்.

பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் உள்ளிட்ட விவசாயத் தலைவா்களை சந்தித்தோம். அவா்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனா். போராட்டத்தை தொடா்வோம் எனக் கூறினா்’ என்றனா்.

காவல் துறையினரின் நடவடிக்கையைத் தொடா்ந்து, போராட்டக் களத்தில் இருந்து விவசாயிகளின் பல உடைமைகள் மாயமாகி யுள்ளன.
குளிா்சாதன பெட்டிகள், சமையல் எரிவாயு உருளைகள், சலவை இயந்திரங்கள், மின்விசிறிகள் உள்ளிட்ட காணாமல் போன உடைமைகள் திருடப்பட்டிருக்கலாம் என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.

போராட்டக் களத்துக்கு அருகேயுள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று இந்த உடைமைகளை விவசாயிகள் தேடி வருகின்றனா்.
காணாமல் போன பொருள்களுக்கும் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்ட கூடாரங்களுக்குமான இழப்பை மாநில அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும் அவா்கள் கோரினா்.

இச்சூழலில், பஞ்சாப் முழுவதும் முதலமைச்சர் பகவந்த் சிங் மானின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் அடுத்த 2 நாள்களுக்கு நடை பெறும். போராட்டத்தை நாங்கள் தொடா்ந்து தீவிரப்படுத்துவோம் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *